பக்கம் எண் :

109

     4. சினங்கொண்ட பகைவர் அச்சத்தையுடைய போர்க்களத்தில்
அலறும்படி.

     5. குறுந்தடியை எடுத்து அடிப்பதனால் ஒலிக்கின்ற, படை வீரரைப்
போருக்கு ஏவுதலைச் செய்யும் பெரிய முரசு.

     6. இடியைப்போல அதிர்ந்து ஒலித்து, செரு மிக்கு - போரின் கண்ணே
மேம்பட்டு.

     7. பகைவரது, கைப்பற்றுதற்கு அரிய அரண்கள் அழியும்படி எடுத்துச்
செல்கின்ற.

     8. கூற்றுவனைப் போன்ற மிக்க சினத்தையும் வன்மையையும்
உடையோய்: "கால முன்ப" (புறநா. 23 : 17)

     9. வாலிதின் - வெண்மையாக. நூலால் இழைக்கப்படாத நுண்ணிய
மயிரைப்போன்ற இழைகளையுடைய; இது சிலந்திவலைக்கு (13) அடை.

     10. மு. பதிற். 36: 8.

     11. புல்லிய முதுகினையுடைய புறாக் கூட்டங்களின் வரிசை கதறும் படி.

     12-3. சிதைந்த தலையையுடைய வேலமரத்தினது உலர்ந்து போன சிறிய
கிளையில் சிலந்தி வனைந்த அசைதலையுடைய வலையைப் போல. அலந்த
தலை அலந்தலை என விகாரமாயிற்று. மேலே போர்த்து அமைந்தமையின்
வலையைப் போர்வை என்றார்.

     14.விளங்குகின்ற மணிகள் நெருங்கின பசிய பொற்றகட்டாற் செய்த
கூட்டினிடத்தே.

     15-6. விளங்குகின்ற நூலிலே கோத்து ஒளியை உமிழ்ந்து விளங்கும்படி
சிறப்பு மிக்க முத்துவடங்களைச் சூழக் கோத்த.

     17. நின் போர் நிழற் புகன்று - நினது போராகிய நிழலின் கண்ணே
விரும்பி வாழ்ந்து. படைவீரருக்குப் போரே இன்பத்தைத் தருவதாதலின்
அதனை நிழலென்றார்.

     கடுஞ்சின முன்ப (8) நார்முடிச் சேரல் (17) நீ பிறர்க்கென வாழ்தியாகல்
மாறு (1) நின் போர்நிழற் புகன்று (17) நின் மறங்கூறு குழாத்தர் எமக்கு
இல்லென்னார் (2) என முடிக்க. (9)


40. போர் நிழற் புகன்ற சுற்றமொ டூர்முகத்
திறாஅ லியரோ பெருமநின் றானை
இன்னிசை யிமிழ்முர சியம்பக் கடிப்பிகூஉப்
புண்டோ ளாடவர் போர்முகத் திறுப்பக்
 5 காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல்
வந்திறை கொண்டன்று தானை யந்திற்
களைநர் யாரினிப் பிறரெனப் பேணி
மன்னெயின் மறவ ரொலியவிந் தடங்க
ஒன்னார் தேயப் பூமலைந் துரைஇ
 10 வெண்டோடு நிரைஇய வேந்துடை யருஞ்சமம்
கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி
வென்றி யாடிய தொடித்தோண் மீகை