|
எழுமுடி
கெழீஇய திருஞெம ரகலத்துப்
பொன்னங் கண்ணிப் பொலந்தோர் நன்னன் |
15 |
சுடர்வீ வாகைக்
கடிமுத றடிந்த
தார்மிகு மைந்தி னார்முடிச் சேரல்
புன்கா லுன்னஞ் சாய்த் தெண்கண்
வறிதுகூட் டரிய லிரவலர்த் தடுப்பத்
தான்றர வுண்ட நனை நறவு மகிழ்ந்து |
20 |
நீரிமிழ்
சிலம்பி னேரி யோனே
செல்லா யோதில் சில்வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கிழை யணிந்து
மெல்லியன் மகளி ரெழினலஞ் சிறப்பப்
பாணர் மைப்பூ மலைய விளையர் |
25 |
இன்களி
வழாஅ மென்சொ லமர்ந்து
நெஞ்சுமலி யுவகையர் வியன்களம் வாழ்த்தத்
தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று
பாக ரேவலி னொண்பொறி பிசிரக்
காடுதலைக் கொண்ட நாடுகா ணவிர்சுடர் |
30 |
அழல்விடுபு
மரீஇய மைந்திற்
றொழில்புகல் யானை நல்குவன் பலவே. |
துறை
- விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் -
நாடுகா ணவிர்சுடர். (29)
(ப
- ரை)
போர்நிழற்
புகன்ற சுற்றமென்பது படைத்தலைவரை.
ஊர்முக மென்றது படைபொரும் இடத்தை.
ஆடவர் போர்முகத்திறுப்ப
(4) வயலிலே (5) வந்து இறைகொண்டன்று
தானை (6); களைநர் யார், இனிப்பிறர் (7); பெரும, நின்றானை (2) சுற்றமொடு
ஊர்முகத்து (1) இறாஅலியரெனச் (2) சொல்லிப் பேணி (7) என மாறிக்
கூட்டுக.
9. ஒன்னாரென்றது
முன்சொன்ன மன்னெயின்மறவர் (8) அல்லாத
பகைவரை.
வெண்டோடு நிரைஇய
(10) பூமலைந்து (9) என மாறிக் கூட்டுக.
11. மன்பதை
நிரப்பியென்றது தன் படையை அவ்வேந்தர் நாட்டுத்தன்
ஆணையானே நிரப்பியென்றவாறு.
12. வென்றியாடியவென்னும்
பெயரெச்சத்திற்கு மீகையென்னும் பெயரினை
அவன்றான் வென்றியாடுதற்குக் கருவியாகிய கையெனக் கருவிப்
பெயராக்குக. மீகை - மேலெடுத்த கை.
14. பொன்னங்கண்ணியும்
பொலந்தேரும் நன்னற்கு அடையாக்குக.
|