பக்கம் எண் :

111

     17. 1உன்னம் சாயவென்றது தன்னொடு பொரக் கருதுவார் நிமித்தம்
பார்த்தவழி அவர்க்கு வென்றியின்மையிற் கரிந்து காட்டவென்றவாறு.

     18. வறிதுகூட்டு அரியலென்றது களிப்பு 2விறக்கவிடும் பண்டங்கள்
பெருகக்கூட்டிற் களிப்புமிகுமென்று அவை அளவே கூட்டின
அரியலென்றவாறு.

     19. தானென்பதைச் சேரல்தான் (16) எனக் கூட்டித் தரவுண்ட
வென்பதனை 3வரையாது கொடுத்தற்பொருட்டு உண்டவென வுரைக்க.

     இனி இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர்.

     27. தோட்டி நீவாமலெனத் திரிக்க.

     29. காடுதலைக்கொண்ட சுடரெனக் கூட்டுக. நாடுகாணவிர்சுடரென்றது
நாடெல்லாம் நின்று காணும்படி நின்று எரிகின்ற விளங்கின சுடரென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு. 'நாடுகா ணவிர்சுடர்' என்று பெயராயிற்று.

     29-30. சுடரழலென்றதனைச் சுடர்போலும் அழலென உவமைத்
தொகையாக்கி அழலை அந்த யானையின் சீற்றத்தீ யாக்குக. மரீஇயவென்றது
அவ்வாறு அழல்விட்டும் பாகரேவலொடு மரீஇயவென்றவாறு.

     சேரல் (16) தான் (19) நேரியோன் (20); இளையர் (24) களம் வாழ்த்த
(26), மகளிர் (23) மலர்ந்த வேங்கையின் இழையணிந்து (22) நலஞ்சிறப்ப (23),
பாணர் பூ மலைய (24), யானையைப் பல நல்குவான் (31) ஆனபின்பு விறலி,
நீ செல்லாயோ (21) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. போராகிய ஆக்கத்தை விரும்பிய படைத்தலைவராகிய
சுற்றத்தோடு போர் நிழல் : பதிற். 39 : 17, உரை.

     1-2. ஊர்முகத்து நின் தானை இறாஅலியர் - போர் செய்யும் இடத்தே
நினது சேனை தங்காதொழிவதாக.

     3-7. மன்னெயில் மறவரது கூற்று.

     3. முரசு இயம்ப கடிப்பு இகூஉ - வீர முரசு ஒலிக்கும்படி குறுந்தடியால்
அடித்து.

     4. எப்போதும் போர்செய்தலால் புண்ணையுடைய தோளையுடைய
படைவீரர் போரிடத்தே வந்து தங்க.

     5-6. காய்த்த கரந்தையாகிய பெரிய கொடியையுடைய விளைகின்ற
வயலில் தானை வந்து தங்குதல் கொண்டது.

     6-7. அவ்விடத்தே நம் துயரத்தைப் போக்குபவர் சேரனையல்லாமல்
வேறு யாருளரென்று விரும்பி.


     1உன்ன நிலை என்னும் துறை 'வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன்
வேந்தற்கு நீ வென்றி கொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வலெனப்
பரவுதலும், எம் வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு
பொதுளுகவெனவும், பகை வேந்தற்கு ஆக்கமுளதெனின் அக்கோடு
படுவதாகவெனவும் நிமித்தம் கோடல் (
தொல். புறத். 5 ந.; பு. வெ. 243)

     2விறக்க - மிக

     3"நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீதல்லே"
(புறநா. 123 : 1 - 2)