பக்கம் எண் :

112

     8. நிலைபெற்ற சிற்றரண்களிலுள்ள மறவர் தம் போராராவாரம்
குறைந்து பணியவும்.

     9-10. ஒன்னார் தேய - மறவரல்லாத பகைவர் அழியவும். வெண்டோடு
நிரைஇய பூ மலைந்து - வெள்ளியதோடு வரிசையாக அமைந்த போருக்கு
உரிய தும்பைப் பூவைச் சூடி. உரைஇ - வஞ்சினங்களைக் கூறி.

     10-11. வேந்துடை அருஞ்சமம் கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி
- வேந்தர்களுடைய அரிய போரை அழித்து அவர் புறங்கொடுத்து
ஓடுதலைப்பெற்று, அவர் நாட்டில் ஆணையால் தன் படையை நிரப்பி.

     12. வெற்றியால் ஆடிய வீரவளையை அணிந்த தோளையுடைய
மேலெடுத்த கையையும்; இது "தேரோர் வென்றகோமான் முன்தேர்க் குரவை"
என்று கூறப்படும் (பதிற். 56 : 5); 'தேரின்கண் வந்த அரசர் பலரையும்
வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த்
தலைவரொடு கைபிணைந்தாடும் குரவை: சூடிய பொன்முடியும்
பூணுமொளிதுளங்க, ஆடியகூத்தரின் வேந் தாடினான்' (தொல். புறத். 21, ந.)

     13. எழுமுடி கெழீஇய - பகையரசரது ஏழு கிரீடங்களாற் செய்த
ஆபரணம் பொருந்திய. திரு ஞெமர் அகலத்து - திருமகள் பரவிய
மார்பினையும். எழுமுடி: பதிற். 14 : 11, உரை. நிரப்பி (11), ஆடிய (12) என்க.

     அகலத்து (13) நார்முடிச் சேரல் (16) என இயைக்க.

     14-6. பொன்னாற் செய்த கண்ணியையும், பொன்னால் இயற்றப்பட்ட
தேரையும், உடைய நன்னனது ஒளிவிடும் பூக்களையுடைய வாகை மரத்தினது
காவலையுடைய அடிமரத்தை வெட்டிய, தூசிப்படையினிடத்தே மிக்குச்
செல்லும் வன்மையையும் உடைய நார்முடிச் சேரனே. வாகை மரத்தைத்
தடிந்தது: பதிற். 4 -ஆம் பதிகம். 9. நார்முடிச் சேரல்: பதிற். 38 : 4, உரை.

     17. புன் கால் உன்னம்சாய - பொலிவற்ற காலையுடைய, உன்ன
மரமானதுகெடும்படி; உன்னம்: இலவமரமென்பர்; இது நிமித்தம் பார்க்கும்
மரங்களுள் ஒன்று; "புன்கா லுன்னத்துப் பகைவனெங்கோ" (பதிற். 61 : 6)

     17-8. தெளிந்த இடத்தையுடைய, களிப்புக்காக இடப்படும் பண்டங்கள்
சிறிதளவாகச் சேர்க்கப்பட்ட கள் இரவலரை மேலே செல்ல வொட்டாமல்
தடுப்ப.

     19. தான் பிறருக்குக் கொடுப்பதற்காக உண்ட பூவரும்புகளாற்
செய்யப்பட்ட நறவினால் களிப்பு மிக்கு.

     20. அருவிநீர் ஒலிக்கின்ற நேரிமலையிலுள்ளான்.

     சேரல் (16) நேரியோன் (20) என முடிக்க.

     21. சில்வளை விறலி - சிலவாகிய வளையை அணிந்து விறலியே
(பதிற். 7 : 6, உரை)

     22. வேங்கையின் - வேங்கை மரத்தைப்போல

     22-3. மெல்லியன் மகளிரென்றது விறலியரை. மகளிர் இழையை
யணிந்து எழினலம் சிறப்ப; எழினலம் - எழுச்சியும் அழகும்; எழிலாகிய
நலமெனினும் ஆம். இழையணிந்த மகளிர்க்கு மலர்ந்த வேங்கை: "எரிமருள்