பக்கம் எண் :

113

     வேங்கை யிருந்த தோகை, இழையணி மடந்தையிற் றோன்றும்" (ஐங்.
294 : 1 - 2)

     24. பாணர் பசிய பொன்னாற் செய்த தாமரைப் பூவைச் சூட.

     24-5. பாணரில் சிறுவர் இனிய களிப்பு வழுவாத மென்சொல்லை
விரும்பி.

     26. நெஞ்சில் மிக்க உவகையை உடையவராய் அகன்ற போர்க்களத்தை
வாழ்த்த. இது களவழி வாழ்த்தென்று கூறப்படும்.

     27. தோட்டி நீவாது - அங்குத்தின் எல்லையைக் கடவாமல். தொடி
சேர்பு நின்று - பூண் பொருந்தி நின்று.

     28, பாகர் ஏவுதலால் ஒள்ளிய தீப்பொறி சிதறும்படி.

     29-31.. காடு தன்னிடத்தே கொண்ட, நாட்டிலுள்ளாரெல்லாம்
காணத்தக்க, விளங்குகின்ற சுடரைப்போன்ற சினத்தீயை விட்டுப்
பாகரேவலினொடு பழகிய வன்மையையுடைய போர்த்தொழிலை விரும்பிய
யானைகள் பலவற்றை அளிப்பான்.

     தொழில் புகல் யானை: பதிற். 82 : 4, 84 : 4.

     இப்பத்திலுள்ள செய்யுட்கள் அந்தாதியாக அமைந்துள்ளன.

     (பி - ம்) 10. வெண்டோடு நிரைத்த 21. செல்லாமோதில். 27. தோட்டி
நிவந்து. (10)

     இதன் பதிகத்துக் கடம்பின் பெருவாயில் (7) என்றது, அந்நன்னன்
ஊரை. நிலைச்செரு (8) என்றது அந்நன்னன் நாடொறுஞ் செய்த போரினை.


                    
(பதிகம்)

ஆராத் திருவிற் சேர லாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் றேவி யீன்ற மகன்முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்
 5 தூழி னாகிய வுயர்பெருஞ் சிறப்பிற்
பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ
உருள் பூங் கடம்பின் பெருவாயி னன்னனை
நிலைச்செருவி னாற்றலை யறுத்தவன்
பொன்படு வாகை முழுமுத றடிந்து
 10 குருதிச் செம்புனல் குஞ்சர மீர்ப்பச்
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்

     களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக்
காப்பியனார்
பாடினார் பத்துப்பாட்டு.

     அவைதாம்: கமழ்குரற்றுழாய், கழையமல்கழனி, வரம்பில் வெள்ளம்,
ஒண்பொறிக்கழற்கால், மெய்யாடுபறந்தலை, வாண்மயங்கு கடுந்தார்,
வலம்படுவென்றி, பரிசிலர்வெறுக்கை, ஏவல் வியன்பணை, நாடுகாணவிர்சுடர்.
இவை பாட்டின் பதிகம்.