பாடிப்பெற்ற
பரிசில்: நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத்
தான் ஆள்வதிற் பாகங்கொடுத்தான் அக்கோ.
களங்காய்க்கண்ணி
நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு வீற்றிருதான்.
(கு
- ரை) 1. ஆராத்திருவின் - நுகர நுகர விருப்பம் அமையாத
செல்வத்தையுடைய.
3-4.
முனைபனிப்பப் பிறந்து - பகைவர் போர்முனைகள் நடுங்கும்படி
பிறந்து.
5. ஊழின்
ஆகிய - முறைமையினால் உண்டான.
6. பூழிநாடு:
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று; இதனை
வென்றமையால் சேரர், "பூழியர் மெய்ம்மறை" (பதிற்.
73 : 11, 90 : 27),
"பூழியர் கோ" பதிற்.
(21 : 23, 84 : 6) என்று கூறப்படுவர். தழீஇ -
தன் நாட்டோடு சேர்த்துக்கொண்டு.
7. உருள்
பூங்கடம்பு - தேருருள் போன்ற பூவையுடைய கடம்பு (முருகு,
11, ந.; பரி. 5 : 81, 21 : 11,
50)
7-8.
"குடாஅ, திரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற் பொலம்பூ
ணன்னன் பொருதுகளத் தொழிய, வலம்படு கொற்றந் தந்த வாய்வாட்,
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்" (199 : 18 - 22) என அகநானூறு
வாகைப்பறந்தலையில் வென்றதாகக் கூறும்.
9. வாகை
நன்னனது காவல்மரம் (பதிற். 40
: 14 - 5)
10.
இரத்தமாகிய செந்நிறத்தையுடைய புனல் யானைகளை இழுத்துச்
செல்ல.
11.
செங்களம் வேட்டு - இரத்தத்தாற் சிவந்த போர்க்களத்தில்
களவேள்வியைச் செய்து; களம் வேட்டல்: முருகு.
99 - 100; மதுரைக்
128 - 30; புறநா. 26 : 6 - 11;
பு. வெ. 160.
நான்காம்
பத்து முற்றிற்று
ஐந்தாம்
பத்து
41. |
புணர்புரி
நரம்பின் றீந்தொடை பழுனிய
வணரமை நல்யா ழிளையர் பொறுப்பப்
பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக் |
5 |
காவிற்
றகைத்த துறைகூடு கலப்பையர்
கைவ லிளையர் கடவுட் பழிச்ச
மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர் பெழுந்த சுடர்வீ வேங்கைப்
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன் |
|