10 |
மாயிருஞ்
சென்னி யணிபெற மிலைச்சிச்
சேஎ ருற்ற செல்படை மறவர்
தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு
வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
மழைபெயன் மாறிய கழைதிரங் கத்தம் |
15 |
ஒன்றிரண்
டலபல கழிந்து திண்டேர்
வசையி னெடுந்தகை காண்குவந் திசினே
தாவ லுய்யுமோ மற்றே தாவாது
வஞ்சின முடித்த வொன்றுமொழி மறவர்
முரசுடைப் பெருஞ்சமத் தரசுபடக் கடந்து |
20 |
வெவ்வ
ரோச்சம் பெருகத் தெவ்வர்
மிளகெறி யுலக்கையி னிருந்தலை யிடித்து
வைகார்ப் பெழுந்த மைபடு பரப்பின்
எடுத்தே றேய கடிப்புடை வியன்கண்
வலம்படு சீர்த்தி யொருங்குட னியைந்து |
25 |
காலுளைக்
கடும்பிசி ருடைய வாலுளைக்
கடும்பரிப் புரவி யூர்ந்தநின்
படுந்திரைப் பனிக்கட லுழந்த தாளே. |
துறை
- காட்சிவாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு -
செந்தூக்கு. பெயர் - சுடர்வீ வேங்கை (8)
(ப
- ரை) 5.
துறைகூடு கலப்பை - ஆடற்றுரைக்கு வேண்டுவன
வெல்லாம் கூடின 1முட்டு.
கடவுட்
பழிச்ச (6) அத்தம் (14) பல கழிந்து (15) காண்குவந்திசின் (16)
என முடிக்க.
7-8.
2களிறு தன் சினத்தாற் செய்த செயலுக்கெல்லாம் வேங்கை
காரணமாய் நின்றமையான் இதற்கு, 'சுடர்வீ வேங்கை'
என்று பெயராயிற்று.
1முட்டு
- முடிச்சு.
2மலர்ந்த
வேங்கைமரம் புலியைப்போன்ற தோற்றத்தை அளித்தமையின்
அது காரணமாயிற்றென்றார்; "கதழ்வாய் வேழம், இருங்கேழ்வயப் புலி வெழீஇ
யயலது, கருங்கால் வேங்கை யூறுபட மறலிப் பெருஞ்சினந் தணியுங் குன்ற
நாடன்" (நற்.
217 : 2 - 5); "உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை" (கலித்.
38 : 6 - 7); "புலிக்கேழ்
வேங்கைப் பூஞ்சினை புலம்ப, முதல்பாய்ந்திட்ட முழுவலி யொருத்தல்"
(அகநா. 227
: 8 - 9)
|