17.
தாவலுய்யுமோவென்றது வருத்தத்தில் நின்று நீங்குமோ என்றவாறு.
தாவென்னும் உரிச்சொல் தொழிற்பெயர்ப்பட்டுத்தாவலென நின்றது.
18. வஞ்சின
முடித்தல் - மாற்றார் மண்டலங்களைக் கொண்டு முடித்தல்.
20. வெம்மையென்னும்
பண்பிற்கு வெவ்வரென்பதும் ஓர் வாய்பாடு.
தெவ்வர் தலை (21) என மாறிக் கூட்டுக. இருந்தலையிடித்து (21) அரசுபடக்
கடந்து (19) என முடித்து அதனைக் கடக்கவெனத் திரித்து அதனை
எடுத்தேறு (23) என்னும் தொழிற்பெயரொடு முடிக்க.
22. வைகார்ப்பு
- ஓருகாலும் இடையறாது தங்கின ஆரவாரம். மைபடு
பரப்பு - கடற்பரப்பு.
இயைந்து (24)
என்பதனை இயையவெனத் திரித்து, உழந்த (27)
என்பதனோடு முடிக்க; இனி ஊர்ந்த (26) என்பதனோடு முடிப்பினும்
அமையும்.
25. காலுளையென்றது
காற்றானே உளைதலையுடைய வென்றவாறு
.உளைதல் - விடுபடுதல்.
நெடுந்தகை, காண்குவந்தேன்
(16); நின் (26) கடலுழந்த தாள் (27)
தாவலுய்யுமோ (17) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
நின் கடலுழந்த
தாள் தாவலுய்யுமோ என்றதனாற் காட்சிவாழ்த்தாயிற்று.
(கு
- ரை) 1. மத்தளத்தின் தாளத்தோடு கூடின, முறுக்கிய நரம்பின்
இனிதாகிய கட்டு முதிர்ந்த.
2. வளைதல் அமைந்த
நல்ல யாழை இளைய மகளிர் தாங்க;
"வணர்கோட்டுச் சீறியாழ்" (புறநா. 155
: 21)
3. தன் கண்களிலே
பண் அமைந்த மத்தளமும் ஒருகண்மாக்கிணையும்
பிற வாத்தியங்களும்; பண்ணென்றது சுருதியை. பண்அமை முழவு -
பண்ணுதல் அமைந்த மத்தளமெனலும் ஆம். பதலை - ஒரு பக்கத்தில்
மாத்திரம் அடித்தலையடைய ஒருவகைப் பறை.
4. கண் அறுத்து
இயற்றிய தூம்பு - மூங்கிலின் கணுக்களை அறுத்து
இயற்றப்பட்ட பெருவங்கியம்; இது களிற்றுயிர்த்தூம்பு என்று கூறப்படும்
(மலைப்படு. 6; அகநா.
111 : 8-9; புறநா. 152 : 15); இது மூங்கிலாற்
செய்யப்படுவது; "கழைவளர் தூம்பின் கண்ணிடமிமிர" (மலைபடு.
533)
5. காவில் தகைத்த
- காவடியில் கட்டிய. துறை கூடு கலப்பையர்
- ஆடற்றுறைக்கு வேண்டுவன எல்லாம் கூடின முட்டுக்களை யுடையராய்.
1-5. மலைபடு. 3-13; புறநா.
103 : 1 - 2. 139 : 1 - 2; 152 : 14 - 7.
6. யாழ்வாசித்தலில்
வல்ல இளையர் கடவுளை வாழ்த்த.
7. மறப்புலிக்
குழூஉக்குரல் செத்து - மறத்தையுடைய புலிக்
கூட்டத்தினது குரலாகக் கருதி. வயக்களிறு - வன்மையை யுடைய
ஆண்டானை.
|