8-9.
வரை சேர்பு எழுந்த - பக்கமலையைப் பொருந்தி வளர்ந்த.
ஒளிவிடும் பூக்களையுடைய வேங்கையினது பொலிவையுடைய பெரிய
கிளையை வளைத்துப் பிளந்து. 10. கரிய பெரிய தலையல் அழபெறச் சூடி.
6-10. இளையர்
கடவுளை வாழ்த்தும் ஒலியினைப் புலியினது முழக்க
மென்று எண்ணிய யானை, பூத்துப் பொலிந்த வேங்கைமரத்தைப் புலியென
எண்ணிச் சிதைத்தது.
11. சேஎர் உற்ற
- திரளுதல் பொருந்திய. செல்படை மறவர் -
பகைவர்மேற் செல்கின்ற சேனையிலுள்ள வீரர்; சேர் - திரளுதலென்னும்
பொருள்படும் உரிச்சொல் (தொல். உரி.
65)
12. தண்டை யுடைய
வெற்றியை யுடையவராகிப் போரை ஏற்றுக்
கொண்டு ஆரவாரித்தாற்போல (பதிற். 54
: 14) வேங்கைமரத்தின் கிளையை
ஏந்தியமையின் அக்கறிற்றுக்குத் தண்டுடை வலத்தரை உவமை கூறினார்.
களிறு (7), பிளந்து (9) மிலைச்சிப் (10) போரெதிர்ந்தாங்குப் (12) பிளிறும் (13)
அத்தம் (14) என இயைக்க.
14. மழை பெய்தல்
நீங்கிய மூங்கில் வாடிய அரிய வழிகள்;
"இரும்பணை திரங்கப் பெரும்பெய லொளிப்ப.........................அருவி யற்ற
பெருவறற்காலையும்" (பதிற். 43
: 12 - 4); "கழைகாய்ந் துலறிய வறங்கூர்
நீளிடை" (புறநா. 370 : 9)
14-5. அரிய
வழிகள் ஒன்று இரண்டு அல்லாதனவாகிய பலவற்றைக்
கடந்துவந்து.
15-6. திண்ணிய
தேரையுடைய பழியில்லாத நெடுந்கை, நின்னைக்
காணும்பொருட்டு வந்தேன். நெடுந்தகை: விளி. வந்திசின்: இசின் தன்மைக்கண்
வந்தது. (புறநா. 22 : 36, உரை.)
17. தாவல் உய்யுமோ
- வருத்தத்தினின்றும் நீங்குமோ. மற்று: அசை.
17-8. வருத்தமின்றித்,
தாம் கூறிய சபதங்களை நிறைவேற்றிய, தம்
தலைவர் கூறுவதையே தாமும் கூறும் ஒன்றாகிய மொழியையுடைய வீரர்.
19. பதிற்.
34 : 10 - 11.
19-21. முரசையுடைய
பெரிய போரின்கண் அரசர்கள் இறக்கும்படி
வெல்லவேண்டியும், வெம்மையின் மிகுதி பெருகவும் பகைவரது கரிய
தலையை உலக்கையால் இடித்த மிளகைப் போல இடித்து, கடந்து - கடக்க;
எச்சத்திரிபு. மிளகெறியுலக்கையினென்பதனை, உலக்கையெறி மிளகின் என
மாறுக.
22. வைகு ஆர்ப்பு
எழுந்த - இடையறாமல் தங்கின ஆரவாரம் எழுந்த.
மை படு பரப்பின் - கருமையுண்டாகின்ற கடற்பரப்பில்.
23. எடுத்தேறு
ஏய - எடுத்தெறிதலை ஏவிய (பதிற்.
84 : 1); கடல்பிறக்
கோட்டியவனாதலின் இது கூறினார்.
கடிப்பு உடை வியல்
கண் - குறுந்தடியால் அடிக்கப்படுதலையுடைய
அகன்ற கண்ணையுடைய முரசத்தால்; வியன்கண் முரசிற்கு ஆயிற்று.
|