பக்கம் எண் :

118

     24. வெற்றியால் உண்டான மிக்க புகழ் ஒருங்குசேர்ந்து பொருந்தி;
சீர்த்தி: உரிச்சொல்.

     25. காற்றால் ஒலித்தலையுடைய மிக்க பிசிராக உடையும்படி.

     25-7. வெள்ளிய தலையாட்டத்தை அணிந்த, விரைந்த செலவையுடைய
குதிரையை ஊர்ந்த நின் ஒலிக்கின்ற அலைகளையுடைய குளிர்ச்சியையுடைய
கடலிலே வருந்திய கால்கள்.

     இயைந்து (24) உடைய (25) ஊர்ந்த (26) நின் தாள் (27) தாவல்
உய்யுமோ (17) என முடிக்க.

     சேரன் கடலுழந்தது: பதிற். 48 : 3 - 4; 'நின் தாள் கடலுழந்த
வருத்தத்தினின்றும் நீங்குமோ' என்பதுபடக் கூறினராயினும் கடல்
பிறக்கோட்டிய வென்றியைப் புலப்படுத்துவதே கருத்தென்று கொள்க.

     (பி - ம்.) 4. கண்ணுறுத்து. 5. தசைத்த. 15. கடந்து. 27. உழந்த நாளே.

 

42. இரும்பனம் புடைய லீகை வான்கழல்
மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவேள் ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
 5 அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும நன்னுதல் கணவ
அண்ணல் யானை யடுபோர்க் குட்டுவ
மைந்துடை நல்லமர்க் கடந்து வலந்தரீஇ
 10 இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச்
சாந்துபுறத் தெறித்த தசும்புதுளங் கிருக்கைத்
தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்
ஓம்பா வீகையின் வண்மகிழ் சுரந்து
கோடியர் பெருங்கிளை வாழ வாடியல்
 15 உளையவிர் கலிமாப் பொழிந்தவை யெண்ணின்
மன்பதை மருள வரசுபடக் கடந்து
முந்துவினை யெதிர்வரப் பெறுதல் காணியர்
ஒளிறுநிலை யுயர்மருப் பேந்திய களிறூர்ந்து
மான மைந்தரொடு மன்ன ரேத்தநின்
 20 தேரொடு சுற்ற முலகுடன் மூய