பக்கம் எண் :

119

  மாயிருந் தெண்கடன் மலிதிரைப் பௌவத்து வெண்டலைக் குரூஉப்பிசி ருடையத் தண்பல வரூஉம் புணரியிற் பலவே


     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - தசும்புதுளங்கிருக்கை (11)

     (ப - ரை) 2-3. கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடுவெள்ளூசி
யென்றது கயத்திலே மூழ்கிச் சிரல் எழுகின்ற காலத்து அதன் வாயலகை
ஒக்கப் புண்களை 1இழைகொள்கின்ற காலத்து அப்புண்ணின் உதிரத்திலே
மறைந்தெழுகின்ற ஊசியென்றவாறு.

     4, நெடுவசியென்றது அவ்வூசித்தழும்பினை. வடுவென்றது அப்புண்ணின்
வடுவினை.

     இனி நெடுவள்ளூசியை நெட்டையென்பதோர் கருவியென்பாருமுளர்.

     5. அம்பென்றது அம்பாலாகிய தழும்பினை.

     5-6. அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோரல்லது தும்பை சூடாது
மலைந்த மாட்சியென்றது அரசன்வீரரில் அம்புசேருடம்பினராய்த் தம்மோடு
வீரமொத்தாரோடல்லாது போர்குறித்தார் தம்மொடு தும்பை சூடாமல்
மாறுபட்ட மாட்சிமையுடைய வென்றவாறு.

     10-11. இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச் சாந்து புறத்து எறிந்த என்றது
மதுநுகர்வழி இடையிடைக் கறித்து இன்புறுதற் பொருட்டு இஞ்சியும். மோந்து
இன்புறுதற்பொருட்டு பூவுமாக விரவித் தொடுத்த மாலையினைப் பூட்டி
2அவ்வாறு பயன்கோடற்குச் சாந்தும் புறத்தெறிந்தவென்றவாறு.

     11. தசும்புதுளங்கிருக்கையென்றது தன் களிப்புமிகுதியால் தன்னை
யுண்டாருடல்போல 3அத்தசும்பிருந்து ஆடும்படியான இருப்பென்றவாறு.

     இச்சிறப்பான் இதற்கு, 'தசும்புதுளங்கிருக்கை' என்று பெயராயிற்று.

     12. சேறு - சுவை. 12 - 3. வண்மகிழ்மட்டத்தை ஓம்பாவீகையிற்
சுரந்தென மாறிக் கூட்டுக.

     இனி மணிநிறமட்டத்தினையும் ஓம்பாவீகையினது வளவிய
மகிழ்ச்சியினையும் சுரந்தென இரண்டாக உரைத்தலுமாம்.

     மன்னரேத்தக் (19) களிறூர்ந்து (18) என முடித்து அதனைக்
களிறூரவெனத் திரித்து மூய (20) என்னும் வினையொடு முடிக்க.


     1இழை கொள்ளல் - நூலால் தைத்தல்.

     2அவ்வாறு பயன் கோடலாவது கள்ளின் நாற்றத்தை மாற்ற மோந்து
இன்புறுதல்.

     3'களிப்பு மிகுதியால் அசையும் மிடாவினின்றும் வார்த்த பசிய
முளையாலாக்கின கட்டெளிவை' (
மலைபடு. 463, ந.)