12

சில கருத்துக்களைக் குறித்திருக்கிறேன். சொற் பொருளொப்புமைக்கும்
கருத்துக்களுக்கும் மேற்கோளாகப் பெரும்பாலும் சங்க நூல்களும் சிந்தாமணி
முதலிய பழைய நூல்களுமே எடுத்துக் காட்டப்பெற்றுள்ளன.

     இந்தப் பதிப்பு நடைபெறுகையில், என்னிடத்திலுள்ள குறிப்புக்களையும்
தாம் படித்தபோது குறித்து வைத்திருந்தவற்றையும் ஒழுங்கு படுத்தி
உபயோகமானவற்றை இணைத்து அமைத்துத் தந்து இப்பதிப்பு நிறைவேறும்படி
ஒழிந்த நேரங்களிலெல்லாம் வந்து உதவியவர்கள் சென்னைக் கிறிஸ்டியன்
காலேஜ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி. மு.
சுப்பிரமணிய ஐயரும்
,
'கலைமகள்' ஆசிரியர் சிரஞ்சீவி வித்துவான் கி, வா.
ஜகந்நாதையரும்
ஆவர். என்னுடைய சக்திக்கு இயன்றளவு இவர்களுக்கு
ஏதோ பொருளுதவி செய்து வருகிறேனே யன்றி இவர்களுடைய
பேருழைப்புக்கு எவ்வளவு உதவினாலும் பற்றாதென்பது என் கருத்து.
ஆதலின் இவர்கள் நல்ல நிலையைப் பெற்றுத் திட காத்திரத்துடனும் தீர்க்காயுளுடனும் இருந்து வரும்படி செய்வித்தருளும் வண்ணம்
ஸர்வேசுவரனைப் பிரார்த்திக்கின்றேன்.

    'தியாகராச விலாசம்'
  திருவேட்டீசுவரன் பேட்டை                     இங்ஙனம்,
   
   21-11-1941                          வே. சாமிநாதையர்
                          -----

பதிப்பாளர் குறிப்பு

     எட்டுத் தொகையுள் நான்காவதாகிய பதிற்றுப்பத்து என்னும் இந்நூலின்
மூன்றாம் பதிப்பு டாக்டர். ஐயரவர்களால் 1941-ஆம் ஆண்டில்
வெளியிடப்பெற்றது. நான்காம்பதிப்பும், ஐந்தாம்பதிப்பும் திரு. கலியாண
சுந்தரையர் அவர்களால் வெளியிடப்பெற்றன. ஆறாம்பதிப்பு ஸ்ரீ தியாகராச
விலாச வெளியீடாகப் பதிப்பிக்கப் பெற்றது. இந்த ஏழாம்பதிப்பு
நூல்நிலையத்தின் 65-வது வெளியீடாக அச்சிடப் பெற்றுள்ளது. நூல்நிலைய
வளர்ச்சிக்காக உழைத்துவரும் டாக்டர். ஐயரவர்கள் பேரர். திரு. க.
சுப்பிரமணிய ஐயர் இந்நூலை வெளியிட்டுக் கொள்ளும் உரிமையை
நூல்நிலையத்திற்கு வழங்கியுள்ளார். அவருக்கு இந்நூல் நிலையம் நன்றி
பாராட்டுகின்றது.

சென்னை-41                             டாக்டர் ஐயரவர்கள்
12-12-1980                                நூல் நிலையத்தார்.