பக்கம் எண் :

120

     பெரும, கணவ (7), குட்டுவ (8), கோடியர்கிளைவாழ நீ (14) சுரந்து (13)
மாப்பொழிந்தவை யெண்ணின் (15), புணரியிற் பல (13) என வினைமுடிவு
செய்க.

     இதனாற் சொல்லியது அவன் கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
உடன் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-6. சேரனது படைவீரர் பெருமை.

     1. கரிய பனைமாலையினையும் பொன்னாற் செய்த சிறந்த
வீரக்கழலையும் உடைய; இவை சேரன் படைவீரர்க்குரியன (பதிற். 31 : 31.
உரை.)

     3. இரையின் பொருட்டு மீனை ஆராயும் சுழற்சியால்,
குளிர்ச்சியையுடைய குளத்தில் மூழ்கி, 3. மீன்கொத்திப் பறவை மேலே
எழுந்தாற் போன்ற நெடிய வெள்ளிய ஊசியினது.

     4. நீண்ட கூர்மை பரவிய தழும்பு ஆழ்ந்த மார்பினையும் உடைய. 2-4.
சிரலின் அலகுக்குப் புண்ணைத் தைக்கும் ஊசி உவமை.

     5. அம்புகள் தைத்த உடம்பினையுடையராக்கிச் சேர்ந்தவர்களோ
டல்லாமல்.

     6. ஏனையாரோடு தும்பை சூடாமல் தம்மை ஒத்தாரோடு போர் செய்யும்
பெருமையையுடைய.

     5-6. "கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற், சென்ற வுயிரினின்ற
யாக்கை, இருநிலந் தீண்டா வருநிலை" (தொல். புறத். 16) க்கு உரியாரைச்
சுட்டியபடி. 7. நன்னுதல் கணவ: பதிற். 14 : 15, உரை.

     9. வலியையுடைய நல்ல போரில் பகைவரை வஞ்சியாது எதிர் நின்று
கொன்று வெற்றியைத் தந்து.

     10-11. கள் இருக்கும் இடத்தின் இயல்பு.

     10. இஞ்சியினையும் பூவையும் கலந்து தொடுத்த வாடாத மாலையைப்
பூட்டி.

     11. சந்தனத்தைப் புறத்தே பூசிய கட்குடங்கள் அசைகின்ற
இருப்பிடங்களில் உள்ள.

     12-3. இனிய சுவை முதிர்ந்த நீலமணியின் நிறத்தையுடைய கள்ளையும்,
தனக்கென்று ஒன்றைப் பாதுகாவாத ஈகையால் வளவிய மகிழ்ச்சியையும்
அளித்து. இவை சேரன் மறவர்க்கு அளித்தன.

     14. கூத்தரது பெரிய சுற்றம் மகிழும்படி.

     14-5. ஆடும் இயல்பையுடைய தலையாட்டம் விளங்குகின்ற மனம்
செருக்கிய குதிரைகளாகிய கொடுக்கப்பட்ட பொருள்களை எண்ணினால்.

     16. மக்களெல்லாம் வியப்படையும் வண்ணம் பகையரசர் அழியும்படி
வென்று.

     17. முற்பட்ட போரானது எதிர்வரப் பெறுதலைக் காணும் பொருட்டு.

     18. விளங்குகின்ற நிலையினையுடைய உயர்ந்த கொம்புகளை ஏந்திய
களிற்றின் மேல் ஏறிச்சென்று.

     19. மானத்தையுடைய வலிமிக்க வீரரோடு பிற மன்னர்கள் ஏத்தும்படி.
19 - 20. நினது தேரோடு நின் படைஞர் உலகமுழுதும் நெருங்கும்படி செய்த.