|
21.
கரிய பெரிய தெளிந்த கடலினது மிக்க திரைகளையுடைய பரப்பில்.
20-21.
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் படை வீரராதலின் அவர்
எங்கும் பரந்து நெருங்குவதற்கு அக்கடல் காரணமாயிற்று.
22.
நுரையாகிய வெள்ளிய தலையையுடைய நிறமுள்ள பிசிராக
உடையும்படி.
23.
தண்ணிய பலவாக வரும் அலைகளைக் காட்டிலும் பலவாகும். கலிமாப் பொழிந்தவை எண்ணின்
(15) புணரியிற் பல (23) என்க.
உளையோடு
கூடிய உருவத்தாலும் மிகுதியினாலும் குதிரைகள்
வெண்டலைப் புணரியை ஒத்தன. தாவிச் செல்லுதல்பற்றியும் மிகுதி பற்றியும்
அலைகளைக் குதிரைக்கு உவமை கூறுதல் மரபு; "வருதிரை
மரபினெண்ணினெண்ணலாம் வாவும் வாசி" (கம்ப.
அட்ச, 8)
(பி
- ம்.) 21. தெண்கழி, தெண்கமலி நிரை. (2)
| 43. |
கவரி
முச்சிக் கார்விரி கூந்தல்
ஊசன் மேவற் சேயிழை மகளிர்
உரல்போற் பெருங்கா லிலங்குவாண் மருப்பிற்
பெருங்கை மதமாப் புகுதரி னவற்றுள் |
| 5 |
விருந்தின்
வீழ்பிடி யெண்ணுமுறை பெறாஅக்
கடவு ணிலைய கல்லோங்கு நெடுவரை
வடதிசை யெல்லை யிமய மாகத்
தென்னங் குமரியொ டாயிடை யரசர்
முரசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழச் |
| 10 |
சொல்பல
நாட்டைத் தொல்கவி னழித்த
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
இரும்பணை திரங்கப் பெரும்பெய லொளிப்பக்
குன்றுவறங் கூரச் சுடர்சினந் திகழ
அருவி யற்ற பெருவறற் காலையும் |
| 15 |
அருஞ்செலற்
பேராற் றிருங்கரை யுடைத்துக்
கடியேர் பூட்டுநர் கடுக்கை மலைய
வரைவி லதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்
தார்கலி வானந் தளிசொரிந் தாஅங்
குறுவ ரார வோம்பா துண்டு |
| 20 |
கைவ
ரார நன்கலஞ் சிதறி
ஆடுசிறை யறுத்த நரம்புசே ரின்குரற் |
|