|
பாடு விறலியர்
பல்பிடி பெறுக
துய்வீ வாகை நுண்கொடி யுழிஞை
வென்றி மேவ லுருகெழு சிறப்பிற் |
25 |
கொண்டி மள்ளர்
கொல்களிறு பெறுக
மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே யென்றும்
இகல்வினை மேவலை யாகலிற் பகைவரும் |
30 |
தாங்காது
புகழ்ந்த தூங்குகொளை முழவில்
தொலையாக் கற்பநின் நிலைகண் டிகுமே
நிணஞ்சுடு புகையொடு கனல்சினந் தவிராது
நிரம்பகல் பறியா வேறா வேணி
நிறைந்து நெடிதிராத் தசும்பின் வயிரியர் |
35 |
உண்டெனத்
தவாஅக் கள்ளின்
வண்கை வேந்தேநின் கலிமகி ழானே. |
துறை
- இயன்மொழி வாழ்த்து. வண்ணமுந் தூக்கும் அது.
பெயர் - ஏறா வேணி (33)
(ப - ரை)
1. முச்சி - கொண்டைமுடி கவரிபோலும் கூந்தலெனக்
கூட்டுக.
5. விருந்தின்
வீழ்பிடியென்றது எண்ணுகின்ற மகளிர்க்கு விருந்தாகி
அம்மகளிர் விரும்பிய பிடியென்றவாறு.
இனிக்காட்டியானைக்கு
விருந்தாகிய அவ்வியானைகள் விரும்பும்
1பார்வைப்பிடியென்பாருமுளர். பிடியினையே எண்ணியது, தங்கள்
நடையொப்புமைபற்றியென்க.
மகளிர்
(2) என்னும் எழுவாய் பெறா (5) என்னும் பயனிலைகொண்டது.
5. பிடியது
எண்ணென்க. எண்ணுமுறையாவது 2சங்கு 3பற்ப முள்ளிட்ட
தொகை.
1பார்வைப்பிடி
- காட்டுயானைகளைப் பிடிக்கும்பொருட்டு
வேட்டுவர்களால் வைக்கப்பெறும் பெண்யானை; இத்தகைய விலங்குகளைப்
பார்வை மிருகமென்பர்; "பார்வை யாத்த பறைதாள் விளவின்" (பெரும்பாண்.
95)
2சங்கு
- ஒரு பேரெண்; 'சங்கு முதலாகிய பேரெண்ணினை உடைத்தாக
நினது வாழ்நாள்' (புறநா.
18 : 5-6. உரை)
3பற்பம்
- பத்மம்; தாமரையென்னும் பேரெண் (தொல்.
புள்ளி
மயங்கு. 98)
|