பக்கம் எண் :

123

     கல்லோங்குநெடுவரையாகிய (6) இமயம் (7) தென்னங்குமரியொடு (8)
வடதிசையெல்லையாக (7) வென மாறிக் கூட்டுக.

     எல்லையாகவென்னும் வினையெச்சத்திற்கு இவ்வாறு எல்லையானவென
ஒரு பெயரெச்சச்சொல் வருவித்து அப்பெயரெச்சத்திற்கு 1ஆயிடை (8) என்புழி
அவ்வென்னும் வகரவீற்றுப் பன்மைச் சுட்டுப் பெயரை முடிபாக்குக.

     10. சொல்பல நாடென்றது ஆயிடை அரசர் நாடெல்லாவற்றையும்.

     12-4. பணை திரங்கும்வண்ணம் பெயல் ஒளித்தலானும் குன்று
வறங்கூரும்வண்ணம் சுடர் சினம் திகழ்கையானும் அருவியற்றவெனக்
கூட்டியுரைக்க.

     15. அருஞ்செலற் பேராறு - புனல் நிறைந்த ஆறு; யாறென்பது ஆறென
மருவிற்று.

     15-8. கரையையுடைத்துத் தளி சொரிந்தாங்கென உடைத்தற்றொழிலை
வானத்தின் தொழிலாக்குக; இந்நீரென ஒரு பெயர்வருவித்து உடைக்கவெனத்
திரிக்கவுமாம்.

     17. சிலைமுழங்கியென்றது சிலைத்தலொடு முழங்கியென்றவாறு.

     21. ஆடு சிறையறுத்த நரம்பென்றது கின்னரமென்னும் புள்ளின்
இசையெழுகின்ற சிறகினைத் தோற்பித்த யாழ்நரம்பென்றவாறு.

     இனிச் சிறையென்றதை அந்நரம்பின் ஒலியெழாமற் சிறைப்படுத்தி
நிற்கும் அதன் குற்றமென்பாரும் உளர்.

     23. வாகையுழிஞையென்றது வாகையை முடிவிலேயுடைய உழிஞை
யென்றவாறு.

     இனி வாகையும் உழிஞையுமென இரண்டாக்கலுமாம். 25. கொண்டி -
கொள்ளை.

     27. 2நுண்கோல் - பிறப்புணர்த்துங்கோல்; நரம்பென்பது மொன்று.

     28. அகவலன் - பாடும் பாணன்.

     என்றுமென்புழி உம்மையை இசைநிறையும்மையாக்கி,
அவ்வென்றென்பதனை முன் எண்ணிநின்ற வியங்கோட்களுடன் கூட்டிப்பின்
அதனை இகல்வினை மேவலை (29) என்னும் வினையொடு முடிக்க.

     இனி, என்றுமென்பதனை முன்னின்ற வியங்கோட்களுடன் கூட்டலும்
ஒன்று.

     முன்னின்ற உண்டு (19) சிதறி (20) என்னும் எச்சங்களையும் மேவலை
(29) என்பதனோடு முடிக்க.

     30. தூங்குகொளை முழவென்றது மந்தகதியையுடைய ஆடற்கேற்ற
முழவு.

     31. கற்பவென்றது கல்வியுடையாயென்றவாறு; பிறிதும் உரைப்ப.
நின்னிலை கண்டிகுமென்றது நின்செல்வத்தின் பெருமை நிலையெல்லாம்
கண்டேமென்றவாறு.


     1பதிற். 11:24. உரை.

     2'நமது பிறப்புணர்த்தும் கரியகோலைக் கையின் கண்ணே தாருங்கோள்
(புறநா. 152 : 18, உரை)