32.
தவிராதென்றது குறைதலறியாதென்றவாறு.
33. 1ஏறா
ஏணியென்றது கோக்காலி.
அதனை
ஏறவேணியென்று வெளிப்படுத்த சிறப்பான் இதற்கு,
'ஏறாவேணி' என்று பெயராயிற்று.
34, நிறைந்து
நெடிதிராவென்றது உண்பார்க்கு வார்த்தலால் நிறைந்து
நெடும்பொழுதிராதவென்றவாறு.
நிரம்பகல்பறியாத
(33) நிறைந்து நெடிதிராத தசும்பு (34) எனப்
பெயரெச்சமறையடுக்காக்குக.
35. உண்டெனத்
தவாவென்றது உண்ணவுண்ண அக்குடங்களை
மேன்மேலும் நிறைத்தலிற் 2குறையாதவென்றவாறு.
குட்டுவ
(11), தொலையாக் கற்ப (31), வேந்தே, நின் கலிமகிழின்
கண்ணே (36) நின்னிலை கண்டேம் (31) என மாறிக் கூட்டியுரைக்க.
வேந்தேயென்னும்
விளி முன்னின்ற விளிகளோடு கூடுதலின் மாறாயிற்று.
இதனாற்
சொல்லியது அவன் செல்வமகிழ்ச்சி கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. கவரியை அணிந்த உச்சிக்கொண்டையையும் மேகத்தைப்
போன்ற விரிந்த கூந்தலையும்.
2. ஊசலை
விரும்புதலையும் செவ்விய ஆபரணங்களையும் உடைய
மகளிர்; இவர் இமயமலைச் சார்பிலுள்ளார்.
3. உரல்போன்ற
பெரிய காலையும் விளங்குகின்ற ஒளியையுடைய
கொம்பையும்; "உரற்கால் யானை" (குறுந்.
232 : 4)
4-5.
பெரிய துதிக்கையையும் மதத்தையும் உடைய யானைகள் புகுந்தால்
அவற்றினிடையே, தமக்கு விருந்தாக விரும்பப்பெறும் பிடிகளை
எண்ணுதற்குரிய முறையின்கண் அடக்கப்பெறாத. மகளிர் (2) பெறா (5) என்க.
1-5.
இமயமலைச் சார்பிலுள்ள மகளிர் அங்கே உலவும் யானைக்
கூட்டத்தைக் கண்டு அக்கூட்டத்தே பெண்யானை எத்துணையுளவென
எண்ணப்புகுங்கால் அவை மிகுதியால் எண்ணில் அடங்காது நின்றன.
மகளிர்
பிடியின்மீதே ஊருதல் வழக்கமாதலின் அவற்றை, 'விருந்தின்
வீழ்பிடி' என்றார். மகளிர் விலங்கு முதலியவற்றை எண்ணிப் பார்த்தல்
இயல்பு; "கோடுதுணர்ந் தன்ன குருகொழுக் கெண்ணி" (நற்.
159 : 4)
6. தெய்வங்களின்
நிலையையுடைய கற்கள் ஓங்கிய உயர்ந்த பக்க
மலைகளையுடைய. 'கடவு ணிலைஇய' என்று பாடம் இருப்பின் சிறக்கும்.
கடவுள் - முனிவரெனினுமாம்.
6-7.
நெடுவரையையுடைய இமயம் வடதிசை எல்லையாக.
7-8.
இமயம் குமரியென்னும் அவற்றின் இடையிலே உள்ள அரசர்.
இமயமும் குமரியும்; பதிற். 11 : 23 - 4,
உரை.
9. முரசையுடைய
பெரிய போர் கெடும்படி ஆரவாரம் எழ. மு. பதிற்.
34 : 10.
1இங்ஙனம்
கூறியது வெளிப்படையென்னும் இலக்கணத்தின்பாற்படும்.
2"அறாஅ
நிலைச்சாடி யாடுறு தேறல்" (பு. வெ.
2)
|