பக்கம் எண் :

125

     12-5. பேராற்றின் சிறப்பு. 12. பெரிய மூங்கில் வாடவும் மிக்க மழை
பெய்யாமல் மறையவும் (பதிற். 41 : 14)

     13. குன்று வறுமை மிகவும் சூரியன் வெம்மை மிக்கு விளங்கவும்

     14. அருவி நீரின்றி அற்றுப் போன பெரிய வறட்சிக்காலத்தும். வறன் -
வளப்பமில்லாத வறுமை.

     12-4. 'கன்மிசை வேய்வாடக் கணைகதிர் தெறுதலால்' (கலித். 11 : 14)

     15-8. மேகத்தின் இயல்பு.

     15. அரிய செலவையுடைய பேராற்றின் பெரிய கரையை உடைத்து.
மழையில்லாமல் வறட்சி மிக்க காலத்தும் பேராறு நீரறாது பாயுமென்றபடி.
இவ்வியல்பு பிற நதிகள் பலவற்றிற்கு இன்மையின், 'அருஞ் செலற் பேராறு'
என்றார்.

     16. புதிய ஏரைப் பூட்டி உழும் உழவர் கார்காலத்தில் பூத்த
கொன்றைப்பூவைச் சூட. ஆடவர் கொன்றையை அணிதல்: பதிற்.
67 : 13 - 14.

     17. கணக்கில்லாத அதிர்கின்ற முழக்கங்களைச் செய்து பெய்தல் மிக்கு.

     18. நிறைந்த முழக்கத்தையுடைய மேகம் துளியைச் செரிந்தாற் போல.

     19. தன்னை உற்றவர் நிரம்ப உண்ணும்படி தனக்கென்று ஒன்றும்
பாதுகாவாமல் அவரோடு சேர்ந்து உண்டு.

     20. இன்பத்திற்குக் காரணமான பாணர் முதலியோர் நிறையப் பெறும்படி
நல்ல அணிகலங்களைக் கொடுத்து. மு. பதிற். 37 : 4.

     18-20. கொடைக்கு வானம் : மலைபடு. 75 - 6. குறிப்புரை.

     21. அசைகின்ற சிறையையுடைய கின்னரத்தை வென்ற யாழ் நரம்பின்
இசையொடு ஒன்றுபட்டுச் சேர்ந்த இனிய குரலையுடைய. ஆடுசிறை - வெற்றி
பெற்ற சிறை எனலுமாம். சிறை : ஆகுபெயர்; இங்கே பறவைக்காயிற்று. யாழ்
நரம்பின் இசையும் குரலும் ஒத்தல் : "விரல்கவர்ந் தெடுத்த கீத மிடறெனத்
தெரித றோற்றார்" (சீவக. 723)

     22. 'பாடுவல் விறலியர்' என்ற பாடம் இருப்பின் ஓசை சிறக்கும் (புறநா.
172 : 3) மகளிர் பிடியை .ஊர்தலே மரபாதலின் விறலியாருக்குப் பிடி
அளிக்கப் பெற்றது.

     23. உளையையுடைய பூக்களையுடைய வாகையை முடிவிலே பெற்ற
நுண்ணிய கொடியாகிய உழிஞையின் பூவையும்; என்றது மதில்வளைத்தலைச்
செய்தற்கு அடையாளமாகிய பூவையணிந்தாரென்றபடி. அவர் முயற்சி
வெற்றியாக முடியுமாதலின் வெற்றிப்பூவை முடிவிலே உடையதாயிற்று.

     24. எப்பொழுதும் வெற்றியை விரும்பும் விருப்பத்தையும், பகைவர்க்கு
அச்சம் பொருந்திய சிறப்பினையும்.

     25. கொண்ட மள்ளர் - பகைப்புலத்தே கொள்ளும் கொள்ளையை
யுமுடைய படைவீரர்; கொண்டி - கொள்ளை; "கொண்டி யுண்டித் தொண்டை
யோர்" (பெரும்பாண். 454)

     26. ஊரிலுள்ள பொதுவிடத்தே சென்று மறுகுசிறையென்னும்
இசைத்துறையிலே தொடங்கி; பதிற். 23 : 5 - 6, உரை.

     27-8. துணிக்கப்பட்ட [?] நுண்ணிய கோலைக் கைக்கொண்டு
போர்க்களத்தை வாழ்த்தும் பாணன் குதிரைகளைப் பெறுக. களம் வாழ்த்தல்: