பக்கம் எண் :

126

பதிற். 40 : 26. அகவலன்: குலத்தோரெல்லோரையும் அழைத்துப் புகழ்தல்
பற்றிப் பாணர்க்கு இப்பெயராயிற்று (மதுரைக் .223, ந.)      

     
     நுண்கோல் அகவலன்: அகநா. 152 : 4. 208 : 3. அகவலர்க்கு மா
அளித்தல்: "நாளீண்டிய நல்லகவர்க்குத் தேரோடு மாசிதறி" (மதுரைக். 223 -
4). என்று - என்று கூறி; உம்மை இசைநிறை பற்றி வந்தது.

     29. இகல்வினை மேவலை ஆகலின் - போராகிய வினையை
விரும்புதலையுடைய ஆதலால்.

     29-31. பகைவர்களும் மனம் அடங்காமற் புகழ்ந்த, மந்த
ஓசையையுடைய முழவினையுடைய அழியாத கல்வியை உடையோய், நின்
நிலைமையைக் கண்டோம். கற்பு - கல்வி (பதிற். 80 : 17)

     32. நிணத்தைச் சுடுதலால் உண்டான புகையொடு நெருப்பு வெம்மையை
நீங்காமல்.

     33. நிரம்புதலையும் அகலுதலையும் அறியாத கோக்காலியினிடத்தே.


     34. நிறைந்து நெடுநேரம் இராத பானைகளில் உள்ள.

     34-6. கூத்தர் உண்டனராகக் குறையாத கள்ளை அளித்தலையுடைய
வளவிய கையையுடைய அரசே, நின் ஆரவாரம் மிக்க மகிழ்ச்சிக் காலத்தே
கண்டிகுமெனக் கூட்டி முடிக்க.

     (பி - ம்.) 5. எண்ணுமெய். 10. சொல்புனனாட்டை. 12. பனைதிரங்க. 18.
தளிபொழிந்தாஅங்கு. (3)



44. நிலம்புடைப் பன்னவார்ப் பொடுவிசும்பு துடையூ
வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற
அரிய வென்னா தோம்பாது வீசிக்
 5 கலஞ்செலச் சுரத்த லல்லது கனவினும்
களைகென வறியாக் கசடி னெஞ்சத்
தாடுநடை யண்ணனிற் பாடுமகள் காணியர்
காணி லியரோநிற் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்றொடை
 10 நுண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை
சேண னாயினுங் கேளென மொழிந்து
புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்
கரண்கடா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசங் கொண்டு
 15 நெடுமொழி பணித்தவன் வேம்புமுத றடிந்து
முரசு செய முரச்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை யுய்த்த கொழுவில் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை