| |
கவலை கவற்றுங்
குராலம் பறந்தலை |
| 20 |
முரசுடைத்
தாயத் தரசுபல வோட்டித்
துளங்குநீர் வியலக மாண்டினிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே. |
துறை - செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - நோய்தபு நோன்றொடை (9)
(ப - ரை)
ஆர்ப்பொடு
(1) அமர்கடந்து (3) எனக் கூட்டுக.
5. கலமென்றது
தான் அணிந்த ஆபரணங்களை.
8. நிற்புகழ்ந்த
யாக்கையென்றது நின்னை எல்லா வீரரும் சொல்லிப்
புகழ்தற்குக் காரணமாகிய யாக்கையென்றவாறு.
யாக்கையாகிய
(8) நோய்தபு நோன்றொடை (9) என்க.
யாக்கையை இங்ஙனம்
சிறப்பித்துக் கூறினமையான் இதற்கு. 'நோய்தபு
நோன்றொடை' என்று பெயராயிற்று.
10. அறுகையென்பான்
மோகூர்மன்னனுக்குப் பகையாய்ச் சேரனுக்கு
நட்பாயிருப்பானோர் குறுநிலமன்னன்.
11. சேணனாயினும்
கேளென மொழிந்தென்றது அக்கோ நீ செய்கின்ற
வலிக்கு உதவிசெய்தற்குச் சேயனாயினும் எனக்கு அவன்தான் நட்பெனச்
சொல்லி யென்றவாறு.
12. களையாப்
பூசல் - ஒருவரால் மாற்றவொண்ணாத வருத்தம்.
13. அரண்கள்
1தா உறீஇயென்றது மாற்றார் அரண்களை அழித்தற் றொழிலைத் தன்பாலே
உறுவித்தென்றவாறு.
16. முரசுசெய
2முரச்சியென்றது அவ்வேம்பினை முரசாகச் செய்யும்படி
முற்றுவித்தென்றவாறு.
முற்றுவித்தலாவது ஒழுகையேற்றலாம்படி
துண்டங்களாகத் தறிப்பித்தல். களிறென்றது மோகூர்மன்னன் களிற்றினை.
களிறுபலபூட்டியென்றது அவனேறும் யானைகளை அவனை அவமதித்துச்
3சாட்டிற்குக் 4கடாவோபாதியாகப் பூட்டியென்றவாறு.
பூட்டியென்றதற்கு,
"வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர், பல்லிருங்
5கூந்தன் முரற்சியாற், குஞ்சர வொழுகை பூட்டி" என இதன் பதிகத்து
வந்தமையால், அம்மகளிர் கூந்தல் மயிர்க்கயிற்றாற் பூட்டியெனக் கொள்க.
1தா
- வருத்தம் (தொல். உரி.
46)
2முரச்சி
- முரஞ்சியென்பதன் பிறவினை; "முரஞ்சன் முதிர்வே"
(தொல். உரி.
35)
3சாடு
- சகடம்.
4கடாவோபாதியாக
- கடாக்களை ஒப்ப.
5கூந்தல்
முரற்சி: "வேந்த ரோட்டிய வேந்துவே னன்னன், கூந்தன்
முரற்சியிற் கொடிதே" (நற். 270
: 9 - 10)
|