பக்கம் எண் :

128

     ஒழுகையுய்த்த (17) ஆடுநடையண்ணல் (17) என மாறிக் கூட்டுக.

     18. கூகையையென இரண்டாவது விரிக்க.

     17-9. பைந்துணிகள் வைத்த இடமறந்த கூகையை அதன் பெடையாகிய
குரால் கவற்றுமென்க.

     வைத்தலை: 1விகாரம். கவலென்னும் பெயரைத் தாவென்பது போல
வருத்தமென்றுரைக்க. 2கவலை கவற்றல் - வருத்தல். 3பறந்தலை யென்றது
இடுகாட்டிற் பிணஞ்சுடுமிடத்தை.

     23. வன்னிமன்றமென்றது அக்காட்டில் வன்னிமரத்தையுடைய
இடத்தினை. அதுதான் பிணத்தொடு சென்றாரெல்லாரும் இருந்து மன்று
போறலின் மன்றெனப்பட்டது. விளங்கிய காடென்றது தன் தொழிலில்
விளங்கிய காடென்றவாறு.

     ஒழுகையுய்த்த (17) ஆடுநடையண்ணல் (17), நின் நோய்தபு நோன்
றொடையினை (9) நிற்பாடுமகள் காண்பாளாக (7); காடு (23) காணா
தொழிவதாக (8) என மாறிக்கூட்டி வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவனை நீ நெடுங்காலம் வாழ்கவென
வாழ்த்தியவாறாயிற்று.

     (கு - ரை) 1. நிலத்தைப் புடைப்பதைப்போன்ற முழக்கத்தோடு.

     1-2. ஆகாயத்தைத் துடைத்து, மிக உயர்ந்த வெல்லுகின்ற கொடிகள்
தேரின்மேலே அசைய.

     3-4. பெருமையையுடையனவாயினும், போரில் வஞ்சியாது எதிர்நின்று
வென்று பெற்ற பொருள்களைக் கிடைத்தற்கு அரியனவென்று கருதாமலும்
அவற்றைத் தனக்கென்று பாதுகாவாமலும் பிறருக்குக் கொடுத்து; "அரிய
வெல்லா மெளிதினிற்கொண், டுரிய வெல்லா மோம்பாது வீசி" (மதுரைக்.
145 - 6)

     5-6. தான் அணிந்த ஆபரணங்களை இரவலர்க்கு மிகக் கொடுத்த
லல்லாமல் கனவினிடத்தாயினும், 'என்னுடைய துன்பத்தை நீக்குக' என்று
கூறுதலை அறியாத குற்றமில்லாத மனத்தையும்; "செல்லுறழ் தடக்கை,
இரப்போர்க்குக் கவித லல்லதை யிரைஇய, மலர் பறியாவெனக் கேட்டிகு
மினியே" (பதிற். 52 : 10 - 12). அரசர் தாம் அணிந்த ஆபரணங்களை
அளித்தல்: "மார்பிற் பூண்ட வயங்குகாழாரம், மடைசெறி முன்கைக் கடகமொ
டீத்தனன்" (புறநா.150 : 20 - 21)

     கலம்: பகைவர்பால் திறையாகப் பெற்ற ஆபரணங்கள் எனலுமாம்;
"வென்றுகலந் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்து" (பதிற். 53 - 1); "நன்கலங்
களிற்றொடு நண்ணா ரேந்தி, வந்துதிறை கொடுத்து வணங்கினர்
வழிமொழிந்து" (அகநா. 124 : 1 - 2)

     7. ஆடு நடை அண்ணல் - வெற்றியைத் தோற்றுவிக்கும் நடையையும்
உடைய பெருமையோய்.


     1விகாரமென்றது, வைதலையென்னும் வினைத்தொகை துய்த்தலை
யென்பதற்கு ஏற்ப வைத்தலையென்று வந்ததனை. வைத்த தலை வைத்தலை
யாயிற்றெனலும் ஆம்.

     2கவலைகவற்றல் : பதிற். 67 : 11.

     3"கள்ளியம் பறந்தலை யொருசிறை யல்கி, ஒள்ளேரி நைப்ப வுடம்பு
மாய்ந்தது" (
புறநா. 240 : 9 - 10)