பக்கம் எண் :

129

     7-9. நின்னைப் பாடும் மகள், நின்னை வீரரெல்லாரும் புகழ்தற்குக்
காரணமன யாக்கையாகிய நிரம்பிய மெய்வலி தங்கும், நோய் நீங்கிய வலிய
கட்டைக் காண்பாளாக. யாக்கையென்பதனைப் போலத் தொடை என்பதும்
உடம்பிற்கு ஒருபெயராயிற்று.

     காணிலியர் - காணாதொழிவதாக. இது காடு (23) காணிலியரென
முடியும்.

     9-10. பெரும்பாண். 243 - 5, ந. மேற்.

     10-16. மோகூர்மன்னனை வென்றமை கூறப்படும்.

     10-11. நுண்ணிய கொடியாகிய உழிஞையினது பூவைச்சூடிய வெல்லும்
போரைச் செய்யும் அறுகை யென்னும், பெயரையுடைய குறுநில மன்னன்
நெடுந்தூரத்திலுள்ளானாயினும், தனக்கு நட்பினனென்று நின்னைச் சொல்லி.

     12. அறுகை தன் நாட்டைவிட்டு நீங்கி மோகூர் மன்னனுக்கு அஞ்சி
ஒளித்த பிறரால் களையப்படாத வருத்தத்தைப் போக்கும் பொருட்டு.

     13-4. அரண்கள் தா உறீஇ அரண்களை வருத்தமுறச் செய்து. தெய்வம்
வருத்தினாற் போன்ற மோகூர் மன்னனான பழையனென்பானது முரசத்தைக்
கைப்பற்றிக் கொண்டு. மோகூருக்கு அரசன் பழையனென்பது, "பழையன்
காக்குங் கருஞ்சினை வேம்பின் முழாரை முழுமுதறுமியப் பண்ணி" (5-ஆம்
பதிகம். 13 - 4) என்பதனாலும், "பழையன் மோகூ ரவையகம் விளங்க"
(மதுரைக். 508) என்பதனாலும் அறியப்படும்.

     15-6. பழையன் தன் மேம்பாட்டைக் கூறும் மொழிகளைக் குறையச்
செய்து அவனுடைய காவல்மரமான வேம்பினது அடிமரத்தை வெட்டிமுரசு
செய்வதற்கு அதனைச் சிறுதுண்டுகளாகச் செய்து முற்றுவி்த்து அவற்றைக்
கொண்டு வருவதற்கு ஆண்யானைகள் பலவற்றைப் பூட்டி. முரச்சி -
முற்றுவித்து.

     வண்டியைச் செலுத்திய (17) ஆடுநடையண்ணல் (7) என இயைக்க.

     17-9. கொழுப்பு இல்லாத பசிய இறைச்சித் துண்டங்களை வைத்த
இடத்தை மறந்த, துய்போன்ற உச்சிக்கொண்டையையுடைய தலையையுடைய
கோட்டானினது சேவலை வருத்துகின்ற பெண்கோட்டானையுடைய
இடுகாட்டிடத்தில்; "குடுமிக் கூகை குராலொடு முரல" (மதுரைக். 170).
பறந்தலை யென்றது பிணஞ்சுடும் இடத்தை.

     20-23. முரசையுடைய பழையதாய் வருகின்ற உரிமையையுடைய
பகையரசர் பலரை வென்று, அசைகின்ற நீரையுடைய கடலால் சூழப்பட்ட
இடம் அகன்ற உலகத்தை இனிமையாக ஆண்டு இறந்த மன்னரைக் கவித்த
தாழிகளையும், வன்னிமரம் நிற்கும் மன்றத்தையுமுடைய விளங்கிய இடுகாடு.

     காடு (23) நோன்றொடையைக் (9) காணிலியர் (8) என முடிக்க.

     மன்னர்மறைத்த தாழி: "நெடுமா வளவன், தேவ ருலக
மெய்தினனாதலின், அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி" (புறநா.
228 : 10 - 12). வன்னிமன்றம்: "சுடலை நோன்பிக ளொடியா வுள்ளமொடு,
மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்" (மணி. 6 : 86 - 7)

     யாக்கையாகிய நோன்றொடையைப் பாடுமகள் காண்பாளாக; காடு
காணாதொழிவதாக நீ நீடூழி வாழ்கவென்பது கருத்து.

     (பி - ம்.) 11. சேணோனாயினும் 18. வைத்துத் தலைமறந்த. (4)