பக்கம் எண் :

130

45. பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
புற்றடங் கரவி னொடுங்கிய வம்பின்
நொசிவுடை வில்லி னொசியா நெஞ்சிற்
களிறெறிந்து முரிந்த கதுவா யெஃகின்
 5 விழுமியோர் துவன்றிய வகன்க ணாட்பின்
எழுமுடி மார்பி னெய்திய சேரல்
குண்டுக ணகழிய மதில்பல கடந்து
பண்டும் பண்டுந்தா முள்ளழித் துண்ட
நாடுகெழு தாயத்து நனந்தலை யருப்பத்துக்
 10 கதவங் காக்குங் கணையெழு வன்ன
நிலம்பெறு திணிதோ ளுயர வோச்சிப்
பிணம்பிறங் கழுவத்துத் துணங்கை யாடிச்
சோறுவே றென்னா வூன்றுவை யடிசில்
ஓடாப் பீட ருள்வழி யிறுத்து
 15 முள்ளிடு பறியா வேணித் தெவ்வர்
சிலைவிசை யடக்கிய மூரி வெண்டோல்
அனைய பண்பிற் றானை மன்னர்
இனியா ருளரோநின் முன்னு மில்லை
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
 20 விலங்குவளி கடவுந் துளங்கிருங் கமஞ்சூல்
வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு
முழங்குதிரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே.


     இதுவுமது. பெயர் - ஊன்றுவை யடிசில் (13)

     (ப - ரை) மதில்பல கடந்து (7) உள்ளழித்து உண்ட (8) அருப்பத்துப்
(9) பிணம் பிறங்கழுவத்துத் (12) தோளோச்சிப் (11) பண்டும் பண்டும் (8)
துணங்கையாடி (12) என மாறிக் கூட்டுக.

     13. 1சோறுவேறென்னா அடிசிலென்றது அரசனுக்கு அடுசோற்றில்
இச்சோறு வேறென்று சொல்லப்படாத அடிசிலென்றவாறு.

     இவ்வடைச்சிறப்பானே இதற்கு, 'ஊன்றுவையடிசில்'என்று பெயராயிற்று.

     16-7. தோல் அனைய பண்பென்றது தான் அம்புபடில் தளராது பிறர்க்கு
அரணமாகும்தோற்கடகு போன்ற பண்பென்றவாறு. குறையாது நிறையாது (19)
என்னும் எச்சங்களைக் கடவும் (20)


     1"இடம்படு புகழச்சனகர் கோனினிது பேணக், கடம்படு களிற்ற
ரசராதியிடை கண்டோர், தடம்படு புயத்தசிறு தம்பியர்கள் காறும், உடம்பொடு துறக்கநக ருற்றவரை யொத்தார்" (
கம்ப. கடிமணப். 1)