பக்கம் எண் :

131

என்னும் வினையொடு முடித்து அதனைக் கடவப்படுமெனவுரைக்க.

     21. மணியிமைப்புப்போலும் மின்னுக்கு மணியிமைப்பென்பது
பெயராயிற்று. 1வேலிடுபென்றது வேலை ஏற்றி நடப்பித் தென்றவாறு.

     22. கடன்மறுத்தலென்றது கடலிற் புக்கு ஒருவினை செய்தற்கு
அரிதென்பதனை மறுத்தலை.

     சேரல் (6), கடன்மறுத்திசினோராகிய (22) தானைமன்னர் (17)
இனியாருளரோ? நின்முன்னுமில்லை (18) எனக் கூட்டி வினை முடிவு
செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-2. பொன்னாற் செய்யப்பட்ட அழகிய தும்பைப்
பூவினையும், தீப்பொறிகள் மேலே எழுகின்ற தூணியில், புற்றில் அடங்கிய
பாம்பைப் போல ஒடுங்கிய அம்புகளையும் உடைய. பொலம்பூந் தும்பை:
புறநா.
2 : 14.

     பலவகைச் சித்திரங்கள் கிளரந்த தூணியெனலுமாம். தூணிக்குப் புற்றும்,
அம்புகளுக்குப் பாம்பும் உவமை. அம்புகளுக்கு அரவு: "புற்றினூடு நுழை நாக
மன்னபுகை வேக வாளிகள்" (கம்ப. நாகபாசப். 86)

     3. வளைதலையுடைய வில்லையும், ஒடுங்காத மனவெழுச்சியையும்;
நாசிவு - துவளுதல்.

     4. ஆண்யானைகளைக் குத்தி வளைந்த, வடுக்களைப்பெற்ற
வேலையுமுடைய. தும்பையையும், அம்பினையுடைய வில்லையும்,
நெஞ்சினையும் எஃகினையுமுடைய விழுமியோர் (5) என முடிக்க.

     யானைப் போருக்கு வேல் உரியதாதலின் களிறெறிந்து முரிந்த என்றார்;
"கைவேல் களிற்றோடு போக்கி" (குறள், 774). கதுவாய் - வடு; "கதுவாய்
போகிய துதிவா யெஃகமொடு" (புறநா. 353 : 15)

     5. நிலையாமை எப்பொழுதும் நெஞ்சில் தங்குதலால் வீரத்தில்
சிறந்தோராகிய படைஞர் நிறைந்த போர்க்களத்தில்; வீரரை, "காஞ்சி சான்ற
வயவர்" (பதிற். 58 : 65 : 4) என்று கூறுதல் பற்றி விழுமியோர் என்றார்

     6. ஏழுமுடிகளாற் செய்யப்பட்ட ஆரத்தை மார்பின் கண்ணே அணிந்த
சேரனே ( பதிற். 14 :11, உரை)

     7. ஆழ்ந்த இடத்தையுடைய அகழியையுடைய மதில்கள் பலவற்றை
வஞ்சியாது எதிர் நின்று வென்று கைக்கொண்டு.

     8. முற்காலங்களில் தாம் உள்ளே புகுந்து அழித்து அவ்விடத்தே
சோறுசமைத்து உண்ட (பதிற். 58 : 6 - 7). இது முற்றுமுதிர்வென்னும்
துறையாகும் (பு. வெ. 117)

     9. நாட்டில் பொருந்திய பழையனவாய் வரும் உரிமையையுடைய
அகன்ற இடத்தையுடைய அரண்களில்; அருப்பம் - அரண்;
"அம்புமிழயிலருப்பம்" (மதுரைக். 67). நாட்பின் (5) கடந்து (7) உண்ட
(8) அருப்பத்துக் (9) கதவம் (10) என்க.

     10-11. கதவுகளைக் காக்கும் திரண்ட கணைய மரத்தைப்போன்ற,
பகைவர் நிலத்தைப் பெறுதற்குக் காரணமான திணிந்த கையை உயர வீசி;
தோள் - கை; "தோளுற்றொர் தெய்வந் துணையாய்த்துயர் தீர்த்த வாறும்"
(சீவக. 10) கையை வீசி ஆடுதல்: பதிற். 40 : 10 - 12.


     1வேலுக்கு மின்னல்: “கூர்நுனை, வேலு மின்னின் விளங்கும்” (புறநா.
42 : 3 - 4)