பக்கம் எண் :

132

     தோளுக்குக் கணையமரம்: பதிற். 31 : 19-20, உரை.

     12 .பிணங்கள் உயர்ந்த போர்க்களப்பரப்பில் துணங்கைக் கூத்தை ஆடி;
"மன்பதை பெயர வரசுகளத் தொழியக், கொன்றுதோளேச்சிய வென்றாடு
துணங்கை" (பதிற். 77 : 3-4)

     13. அரசனுக்குச் சோறு வேறு உளதென்று சொல்லாத எல்லோருக்கும்
ஒருபடித்தாக உயர்ந்த ஊனையும் துவையலையும் உடைய உணவை உண்ட;
சோற்றை வேறாகப்பிரித்து அறிய இயலாத ஊனும் துவையுமெனலுமாம்;
"செவ்வூன் றோன்றா வெண்டுவை முதிரை" (பதிற். 55 : 7). இது பிண்டமேய
பெருஞ்சோற்று நிலையைக் கூறியபடி (பதிற். 30 உரை). ஊன்றுவையடிசில்:
“அமிழ்தன மரபி னூன் றுவை யடிசில்” (புறநா. 390 : 14.) புறங்கொடுத்து
ஓடாத பெருமையையுடைய வீரர் உள்ளவிடத்தே விட்டுத் தங்கி.

     15. அரிய வழிகளை அடைத்தற்கு முள்ளிடுதலை யறியாத
எல்லையையுடைய பகைவரது; "இனநன்மாச் செலக்கண்டவர், கவைமுள்ளிற்
புழையடைப்பவும்" (புறநா. 98 : 7 - 8)

     16-7. வில்லிலிருந்து வரும் அம்பின் வேகத்தை அடங்கச்செய்த
வன்மையையுடைய, வெள்ளிய கிடுகுபடையைப்போன்ற பண்பினையுடைய
சேனையையுடைய அரசர். அடக்கிய தானை, அனைய தானையென்க.
"கழிப்பிணிக் கறைத்தோல்" (அகநா. 24 : 14) எனக்கருங்கடகும்
உண்டாதலின் வெண்டோல் என்பது இனமுள்ள அடை.

     அசையாமைக்குத் தோலுவமை: "தோல், துவைத்தம்பிற் றுளை
தோன்றுவ, நிலைக்கொராஅ விலக்கம்போன்றன" (புறநா. 4 : 5 - 6)

     17-8. மன்னர் இனி யார் உள்ளார்? நினக்கு முன்னும் இல்லை.

     19-21. மேகம் முகந்துகொள்ளக் குறையாமலும், ஆற்றுநீர் புகமிகாமலும்,
குறுக்காக வீசுகின்ற காற்றுச் செலுத்துகின்ற அசையும் பெரிய நிறைந்த
நீரினிடத்தே, விளங்குகின்ற மணி விட்டுவிளங்குதலைப் போல வேலை ஏற்றி
முழங்குகின்ற அலையையுடைய கடலிற்புக்கு ஒருதொழிலைச் செய்தற்கு
மறுத்தோராகிய மன்னர் (17) என இயைக்க.

     19-22. "மழைகொளக் குறையாது புனல்புக மிகாது, கரைபொருதிரங்கு
முந்நீர் போல" (மதுரைக். 424 - 5)

     மன்னராகிய (17) மறுத்திசினோர் (22) நின் முன்னும் இல்லை; இனியார்
உளர் (18) என முடிக்க. (5)

 

46. இழையர் குழையர் நறுந்தண் மாலையர் சுடர்நிமி ரவிர்தொடி செறித்த முன்கைத் திறல்விடு திருமணி யிலங்கு மார்பின் வண்டுபடு கூந்தன் முடிபுனை
மகளிர்
 5 தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப் பணியா மரபி னுழிஞை பாட இனிதுபுறந் தந்தவர்க் கின்மகிழ் சுரத்தலிற்