|
சுரம்பல கடவுங்
கரைவாய்ப் பருதி
ஊர்பாட் டெண்ணில் பைந்தலை துமியப் |
| 10 |
பல்செருக்
கடந்த கொள்களிற் றியானைக்
கோடுநரல் பௌவங் கலங்க வேலிட்
டுடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய
வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர்
செல்குவ மென்னார் பாடுபு பெயர்ந்தே. |
இதுவுமது.
பெயர் - கரைவாய்ப் பருதி (8)
(ப - ரை)
இழையர் குழையர் (1) மாலையர் ஆகிய மகளிர் (4) எனக்
கூட்டுக.
3. பிற ஒளியிற்
றிறலுடைமையான் இவ்வொளிக்கு ஆகுபெயரால்
திறலென்று பெயராயிற்று.
7. இன் மகிழ்
சுரத்தல் - இனிய மகிழ்ச்சியைச் சுரத்தல்.
இதனாற் பயன்
முற்கூறிய புறந்தருதலாகிய கொடையோடே இவர்களை
மயக்கிய முகனமர்தலும் உடையனென்றவாறு.
8. சுரம்பலவென்றது
பகைவரொடு பொருங்களத்தில் தேர் செலுத்தற்கு
அரிதாம்படி படையொடு விலங்கும் அரிய இடங்கள் பலவற்றினுமென்றவாறு.
பருதியென்றது
வட்டம்; அதனை உடைமையால் தேருருளை
பருதியெனப்பட்டது.
9. ஊர்பாட்டு
எண்ணில் பைந்தலை துமியவென்றது பைந்தலையைத்
துமித்தற்கென்று தேரை வலியச் செலுத்துவதன்றி அப்பருதி தான் ஊர்கின்ற
பாடுதன்னிலே யானை செய்கின்ற போர்க்கு அஞ்சி ஓடி மடிந்தாருடைய
அளவிறந்த பைந்தலை துமியவென்றவாறு.
இவ்வாறு பின்வந்த
அடைச்சிறப்பான் இதற்கு, 'கரைவாய்ப் பருதி'
என்று பெயராயிற்று.
12. கடலோட்டியவென்றது
தன்னுள் வாழ்வார்க்கு அரணாகிய கடல்
வலியை அழித்தவென்றவாறு.
13-4. குட்டுவற்
பாடிக் கண்டோர் பெயர்ந்து செல்குவ மென்னாரென
மாறிக் கூட்டுக.
மகளிர் (4)
உழிஞை பாட (6) மகிழ் சுரத்தலிற் (7) குட்டுவற் (13) பாடிக்
(14) கண்டோர் (13) பெயர்ந்து செல்குவமென்னார் (14); நிற்கவெனக்
கருதுவரென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவன் கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-4. விறலியரது வருணனை.
இழையை அணிந்தவரும்
தளிரை அணிந்தவரும் நறுமணத்தையுடைய
குளிர்ந்த மாலையை அணிந்தவருமாகிய, ஒளி மிகுகின்ற விளங்கிய தொடியை
அணிந்த முன்கையையும், சிறந்த ஒளியை விடுகின்ற அழகிய மணி
விளங்குகின்ற மார்பினையும் உடைய, வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலைக்
கொண்டையாக அணிந்த பாண்சாதிமகளிர்.
|