பக்கம் எண் :

134

     5. நரம்புக்கட்டுப் பொருந்திய பேரியாழில் பாலைப்பண்ணை அமைத்து
(பதிற். 57 : 8, 66 : 2)

     6-7. பகைவர்க்குப் பணியாத இயல்பையுடைய உழிஞைத்திணையைப்
புகழ்ந்து பாட, அவரை இனிமையாகப் பாதுகாத்து அவர்களுக்கு இனிய
மகிழ்ச்சியை அளித்தலினால்.

     8-9. போர்க்களத்தில் படையொடு கூடித் தடுக்கும் அரிய இடங்கள்
பலவற்றிலும் செலுத்தப்படும் தேரினது தேய்ந்த வாயையுடைய உருளை, தான்
ஊர்கின்ற போக்கிலே வீரருடைய எண்ணில்லாத பசிய தலைகள் வெட்டப்பட.

     10. பல போர்களை வஞ்சியாது எதிர்நின்று வென்ற, கொல்லுகின்ற
களிறாகிய யானைகளையுடைய.

     யானைக் (10) குட்டுவன் (13) என இயைக்க.

     11-3. சேரன் கடல்பிறக்கோட்டியது.

     11-4. சங்குகள் ஒலிக்கின்ற கடல் கலங்கும்படி வேலை ஏற்றி நடப்பித்து,
கரையிலே வந்து மோதி உடைகின்ற அலைகளையுடைய பரப்பினையுடைய
படுகடலினது அரணாகின்ற வலியை அழித்த, வெல்லுதலால் வரும்
புகழையுடைய குட்டுவனைக் கண்டோர், அவனைப் பாடி மீண்டு
செல்வோமென்று கருதார்.

     குட்டுவன் கடலோட்டியது: பதிற். 48 : 3 - 4; "மட்டவிழ் தெரியன்
மறப்போர்க் குட்டுவன், பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து,
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்குதிரைப் பௌவ நீங்க வோட்டிய,
நீர்மா ணெஃகம்" (அகநா. 212 : 16 - 20); "சினமிகுதானை வானவன்
குடகடற், பொலந்தரு நாவா யோட்டிய வவ்வழிப், பிறகலஞ் செல்கலா
தனையேம்" (புறநா. 126 : 14 - 6); "கொடும்போர் கடந்து நெடுங்கட
லோட்டி" (சிலப். 28 : 119) (6)

 

47. அட்டா னானே குட்டுவ னடுதொறும்
பெற்றா னாரே பரிசிலர் களிறே
வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து
வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெருவிற்
சொரிசுரை கவரு நெய்வழி புராலிற்
பாண்டில் விளக்குப் பரூஅச்சுட ரழல
நன்னுதல் விறலிய ராடும்
தொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே.

     இதுவுமது. பெயர் நன்னுதல் விறலியர் (7)

     (ப - ரை) தெருவின் (4) தொன்னகர் (8) எனக் கூட்டுக.

     5. சொரி சுரை கவரும் நெய்யென்றது நெய்யைச் சொரியும்
உள்ளுப்புடையுண்டாயிருக்கின்ற திரிக்குழாய் தான் ஏற்றுக்கொண்ட
நெய்யென்றவாறு.

     சுரையென்றது திரிக்குழாய்க்கு ஆகுபெயர்.