பக்கம் எண் :

136

48. பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி
ஒண்ணுதல் விறலியர்க் காரம் பூட்டிக்
கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ
 5 ஆண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர்
கொள்ளாப் பாடற் கெளிதினி னீயும்
கல்லா வாய்மைய னிவனெனத் தத்தம்
கைவ லிளையர் நேர்கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா வாண்மை
 10 முனைசுடு கனையெரி யெரித்தலிற் பெரிதும
இதழ்கவி னழிந்த மாலையொடு சாந்துபுலர்
பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ
நின்மலைப் பிறந்து நின்கடன் மண்டும்
மலிபுன னிகழ்தருந் தீநீர் விழவிற்
 15 பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை
மேவரு சுற்றமோ டுண்டினிது நுகரும்
தீம்புன லாய மாடும்
காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே.

     துறை - இயன்மொழி வாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - பேரெழில் வாழ்க்கை (15)

     (ப - ரை) 3. நிலைஇயென்றது நிலைப்பித்தென்னும் பிறவினை.

     4. கடலொடுழந்தவென்னும் ஓடு 1வேறுவினையொடு. 'பரதவ'
என்றதனாற் சொல்லியது அக்கடலின் உழத்தற்றொழிலொப்புமைபற்றி
அக்கடற்றுறை வாழும் நுளையற்குப் பெயராகிய பரதவனென்னும் பெயரான்
2
இழித்துக்கூறினான்போலக் குறிப்பான் உயர்த்து வென்றிகூறினானாகக்
கொள்க.

     5-9. தாரத்தையென விரித்து ஈயும் (6) என்பதனொடு முடித்து.
ஈயுமென்னும் பெயரெச்சத்தினைக் கல்லா வாய்மையன் (7) என்னும்
3
காரணப் பெயரொடு முடித்து, அப்பெயரை இக்கவி கூறுகின்றான்
பிறர்கூற்றினைக்கொண்டு கூறுதற்கண் வந்த எனவொடு புணர்த்து,
போர் செய்து அரிதிற்பெற்ற பொருளை எளிதாக, மனங்கொள்ளாப்
பாடலையுடைய


     1கடலுக்கு வினையின்மையின், 'வேறு வினையொடு' என்றார்;
மாலையொடு என்றவிடத்தும் இஃது ஒக்கும்.


     2பழிப்பதுபோலப் புகழ்புலப்படுத்தல் என்னும் அணி.      


     3
காரணப்பெயரென்றது ஈதற்குக் காரணமான வாய்மையையுடையவன்
எனப் பொருள்படுதல்பற்றி.