1தரம்போதாதார்க்குக்
கொடுக்கும் பேதை இவுனென இழித்துக் கூறற்கு
ஏற்பக் கைவலிளையர் அடைவே தத்தம் கையைச் சுட்டிநிரைக்கும்படி
இரவலிடத்து வணங்கிய மென்மையென வுரைக்க. ஆண்டு நீர்ப் போந்து
பெற்ற தாரத்தையென்றான், இக்கவிகூறுகின்றான்; அவ்வுருபிற்கு முடிபாகிய
ஈயுமென்றது கூறுகின்றார் கைவலிளையர். அக்கைவலிளையர் கூறிற்றாக
இக்கவி கூறுகின்றானுக்குக் கொண்டு கூட்டாகப் புகுந்தமையான்,
அவ்விரண்டாவதற்கு அவ்வீயுமென்னும் வினை முடிபாமெனக் கொள்க.
இதற்குப் பிறவாறும் கூறுப.
7. கல்லா வாய்மையனென்றது
கல்லாத தன்மையை உண்மையாக
உடையனென்றவாறு.
11. மாலையொடென்னும்
ஓடு வேறுவினையொடு.
11-2. சாந்து
புலர் மார்பவெனக் கூட்டுக.
14. மலிபுனலையுடைமையின்
யாறு மலிபுனலெனப்பட்டது. நிகழ தரும்
தீநீரென்றது அவ்வியாறுகளிலே புதிதாக வருகின்ற இனிய (புது) நீரென்றவாறு.
15. பொழில்
வதிவேனிற் பேரெழில் வாழ்க்கையென்றது வேனிற்
காலத்து மனையில் வைகாது பொழில்களிலே வதியும் பெரிய செல்வ
அழகையுடைய இல்வாழ்க்கையென்றவாறு. வேனில் பொழில் வதியென்க.
வாழ்க்கையையுடைய (15) ஆயம் (17) எனக் கூட்டுக.
இச்சிறப்பானே
இதற்கு, 'பேரெழில் வாழ்க்கை' என்று பெயராயிற்று.
இனிப் பொழில்வய
வேனிலென்பது பாடமாயின், பொழில்வயப்
படுவதான பொருளுண்டாகிய வேனிலென உரைக்க.
16. இனிது நுகருமென்றது
சுற்றத்தோடு உண்டலேயன்றிச் செல்வ
முடையார் அச்செல்வத்தாற் கொள்ளும் பயன்களெல்லாம்
கொள்ளுமென்றவாறு.
17. புனலாயம்
- புனலாடற்கு வந்த திரள்.
பரதவ (4), வணங்கிய
சாயலையும் வணங்கா ஆண்மையினையு
முடைய (9) சாந்துபுலர் (11) மார் நின்பெயர் (12) பெருந்துறை மணலினும்
பல (18) வாழியர் (12) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவனை நீடுவாழ்கவென வாழ்த்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1. பசுமையான பொன்னாற் செய்த தாமரைப் பூவைப்
பாணர்க்குச் சூட்டி.
2. ஒள்ளிய நெற்றியையுடைய
விறலியர்க்கு முத்துமாலைகளைப்
பூணும்படி கொடுத்து (பதிற். 12 :
23)
1-2. "வாடா
மாலை பாடினி யணியப், பாணன் சென்னிக் கேணி பூவா,
எரிமரு டாமரைப் பெருமலர் தயங்க" (புறநா.
364 : 1 - 3) என்பதன்
அடிக்குறிப்பைப் பார்க்க.
3-4. சேரன்
கடலோட்டிய செய்தி கூறப்படும்.
1தரம்
- வரிசை.
|