கெடுதற்கரிய
பலவகையான புகழை நிலைபெறச் செய்து, கடல் நீரிலே
புகுந்து அதன்கண்ணே வருந்தி முயன்ற குளிர்ச்சியையுடைய துறையையுடைய
பரதவனே.
5-7. இளையர்
கூற்று.
5-8. அவ்விடத்தில்
நீரிற்பெற்ற அரிய பொருள்களை இவ்விடத்தே
இவருடைய மனங்கொள்ளாப் பாடலுக்கு எளிதிலே கொடுக்கும்,
கொடுத்தற்றொழிலையன்றிப் பிறதொழிலைக் கல்லாத வாய்மையையுடையவன்
இவனென்று தங்கள் தங்களுடைய ஒத்த கைகளைத் தம் தொழிலில் வல்ல
இளையர் வரிசையாக நீட்ட. கொள்ளப் பாடல் - சேரன் புகழை முழுவதும்
கொள்ளாத பாடல் எனலுமாம் (புறநா. 53
: 6 - 8) அதற்கும் எளிதினின்
ஈவானென்றது அவனது கொடைமடத்தைக் கூறியவாறு.
9. மகளிரிடத்து
வணங்கிய மென்மையையும் பகைவரிடத்து வணங்காத
ஆண்மையையும் உடைய; "மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து" (புறநா.
221 : 5); வணங்கிய சாயல் - நட்பினரிடத்தே வணங்கிய மென்மை எனலுமாம்
(பதிற். 63 : 2 - 3); கூற்றம் வரினுந்
தொலையான்றன் னட்டார்க்குத்,
தோற்றலை நாணாதோன்' : (கலித். 43 :
10 - 11). உரையாசிரியர் வேறு
கூறுவர்.
10-12. பகைவர்
முனைகளைச் சுடுகின்ற மிக்க நெருப்புத் தீத்தலினால்
மிகவும் இதழ்கள் அழகு அழியப்பெற்ற மாலை அணிதலோடு, பூசிய
சந்தனமும் புலர்ந்த, பல வரிகளையுடைய மார்பையுடையாய், நின்பெயர்
அழியாமல் வாழ்க.
மாலை வாடுதல்:
வாடுக விறைவநின், கண்ணி யொன்னார், நாடுசுடு
கமழ்புகை யெறித்த லானே" (புறநா. 6 : 21
- 2) பொறிமார்பு: பதிற். 88 : 30,
உரை; "அம்பகட்டு மார்பிற் செம்பொறி வாங்கிய " (முருகு.
104 - 5). பொறி
மூன்றாதலின் பல்பொறி என்றார்; "வரையகன் மார்பிடை வரியு மூன்றுள"
(சீவக. 1462)
13-5. நினது
மலையிலே தோன்றி நினக்கு உரிய மேல்கடலிலே
விரைந்து செல்லும் ஆற்றினிடத்தே புதிதாகவரும் இனிய நீர்விழாவையும்
வேனிற்காலத்தே குளிர்ச்சியின் பொருட்டுச் சோலைகளில் வாழும் பெரிய
அழகையுடைய இல்வாழ்க்கையையும் உடைய; நீர்விழாவின் கண்
வேனிற்காலத்துப் பொழிலில் தங்குகின்ற பெரிய அழகையுடைய வாழ்க்கை
எனலுமாம்; புள்ளொலிப் பொய்கைப் பூந்துறை முன்னித் தண்பொழில்
கவைஇய சண்பகக் காவிற் கண்டோர் மருளக் கண்டத்திறுத்த விழாமலி
சுற்றமொடு" (பெருங். 1.38 : 277- 80).
மலிபுனல்: ஆற்றுக் காயிற்று.
16. விரும்புதல்
வருகின்ற சுற்றத்தோடு உண்டு, மற்ற இன்பங்களையும்
இனிமையாக நுகர்கின்ற.
17-8. மக்களின்
தொகுதி ஆடுகின்ற இனிய புனலையுடைய
காஞ்சியென்னும் ஆற்றின் அழகிய பெரிய துறையிடத்தே உள்ள மணலைக்
காட்டிலும் மிகப் பலகாலம். இளையர் கைநிரைப்ப (8) மணலினும் பல (18)
நின் பெயர் வாழியர் (12) என முடிக்க.
காஞ்சி: இது
கொங்குநாட்டில் உள்ளதோர் ஆறு; "மீகொங்கிலணி
காஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானை" (தே. சுந்தர.);
"பூஞ்சோலையணி புறவிற்
|