பக்கம் எண் :

139

     காஞ்சிவாய்ப் பேருர் புக்கு" (சாஸனம்). இது நொய்யலென வழங்கும்.

     ஆற்றின் மணலினும் பலகாலம் வாழ்கவென்றல் மரபு: மண்ணாள்
வேந்தே நின்வா ணாட்கள், தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க
அகழ்கடன் ஞால மாள்வோய் வாழி (சிலப். 28 : 125 - 7); "சிறக்கநினாயுள்
மிக்கவரு மின்னீர்க் காவிரி எக்க ரிட்ட மணலினும் பலவே" (புறநா.
43 : 21 - 3) (8)


49. யாமுஞ் சேறுக நீயிரும் வம்மின்
துயலுங் கோதைத் துளங்கியல் விறலியர்
கொளைவல் வாழ்க்கைநுங் கிளையினி துணீஇயர்
களிறுபரந் தியலக் கடுமா தாங்க
 5 ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
எஃகுதுரந் தெழுதருங் கைகவர் கடுந்தார்
வெல்போர் வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து
மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை யதிர மண்டி
 10 நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்
நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி
மழைநாட் புனலி னவற்பரந் தொழுகப்
படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
படுகண் முரச நடுவட் சிலைப்ப
 15 வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக்
கருஞ்சினை விறல்வேம் பறுத்த
பெருஞ்சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே.

     துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர்
- செங்கை மறவர் (10)

     (ப - ரை) 4. 1கடுமா தாங்கவென்றது கால் கடிய குதிரைமேல்
ஆட்கள் வேண்டிய அளவுகளிலே செலவை விலக்கிச் செலுத்தவென்றவாறு.

     5. திரிந்து கொட்பவென்றது மறிந்து திரியவென்றவாறு.

     6. கைகவர் கடுந்தாரென்றது மாற்றார்படையில் வகுத்து நிறுத்தின
2கைகளைச் சென்று கவரும் கடிய தூசிப்படையென்றவாறு.

     கடுந்தாரையுயை (6) வேந்தர் (7) எனக் கூட்டுக.


     1"நீரழுவ நிவப்புக்குறித்து, நிமிர்பரிய மாதாங்கவும்" (புறநா. 14 : 6 - 7)

     2கை - சேனையின் இருபுறத்தும் அதன் கைபோலுள்ள வீரர்.