பக்கம் எண் :

142

 15 நல்லிசை நனந்தலை யிரிய வொன்னார்
உருப்பற நிரப்பினை யாதலிற் சாந்துபுலர்பு
வண்ண நீவி வகைவனப் புற்ற
வரிஞிமி றிமிரு மார்புபிணி மகளிர்
விரிமென் கூந்தன் மெல்லணை வதிந்து
 20 கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப்
பொழுதுகொண் மரபின் மென்பிணி யவிழ
எவன்பல கழியுமோ பெருமபன்னாட்
பகைவெம் மையிற் பாசறை மரீஇப்
பாடரி தியைந்த சிறுதுயி லியாலாது
 25 கோடுமுழங் கிமிழிசை யெடுப்பும்
பீடுகெழு செல்வ மரீஇய கண்ணே.

     துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகு
வண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கு. பெயர் -
வெருவரு புனற்றார் (11)

     (ப - ரை) மாமலைக்கண்ணே (1) உறை சிதறி (2) எனக் கூட்டி
அதனைச் சிதறவெனத் திரிக்க.

     4. உலகம் புரைஇயென்றது உலகத்தைப் புரந்தென்றவாறு.

     7. மூன்றுடன் கூடிய கூடலென்றது அக்காவிரிதானும் ஆன்பொருநையும்
1குடவனாறுமென 2இம்மூன்றும் சேரக்கூடிய கூட்டமென்றவாறு.

     காவிரி அனையையாவதேயன்றி (6) மூன்றுடன் கூடிய கூட்டத்தனையை
(7) எனக் கொள்க.

     8. உரவுத்திரை பிறழவென்றது வலிய திரைகள் தம்மில் மாறுபட்டுப்
புடைபெயரவென்றவாறு.

     அவ்வில் பிசிரவென்றது அவ்விற்கள் அத்திரைக்குப் பிசிராக
வென்றவாறு. பிசிரவென்றது பெயரடியாகப் பிறந்த வினை.

     பிறழ (8) என்றது முதலாக நின்றசெயவெனெச்சங்களை நிரப்பினை (16)
என்னும் பிறவினையோடு முடிக்க.

     பணையாகிய முழங்கொலியென இருபெயரொட்டு.

     ஒலியையுடைய (10) புனல் (11) எனக் கூட்டுக.

     10. வெரீஇய வேந்தரென்றது தம் பகையை வெருவி இவன்றன்னுடன்
நட்பாகிய வேந்தரென்க.

     11. வெருவரு புனற்றாரென்றது தன்னை அடைத்தார் வெருவரத்தக்க
புனற்றாரென்றவாறு.


     1குடவனெ்றாற் போல்வதோர் யாறுமெனவும் பிரதிபேதமுண்டு.

     2இத்தலம் திருமுக்கூடலென்று வழங்கப்படும். இங்கே பழையதாகிய
சிவாலயம் ஒன்றுண்டு.