பக்கம் எண் :

143

     இச்சிறப்பானே இதற்கு, 'வெருவரு புனற்றார்' என்று பெராயிற்று.

     புனற்றாரென்றதனைச் தார்ப்புனலென்றவாறாகக் கொள்க.

     16. உருப்பென்றதனைச் சினத்தீயென்றவாறாகக் கொள்க.

     ஆதலினென ஏதுப்பொருட்கண் நின்ற ஐந்தாவதற்கு யான் நின்னை
ஒன்று கேட்கின்றேனென்று ஒரு சொல் வருவிக்க.

     சாந்து புலர (16) வண்ணம் நீவ (17) எனத் திரிக்க.

     18. மார்புபிணி மகளிரென்றது மார்பாற் பிணிக்கப்பட்ட மகளி
ரென்றுவாறு.

     வதிந்து (19) என்னும் எச்சத்தினைப் பொழுதுகொள் (21) என்னும்
வினையொடு முடிக்க.

     முயக்கத்துப் (20) பொழுதுகொண் மரபின் மென்பிணி (21) என்றது
முயக்கத்திலே இராப்பொழுதைப் பயன் கொண்ட முறைமையினையுடைய
மெல்லிய உறக்கமென்றவாறு.

     மென்பிணியென்றது புணர்ச்சி 1யவதிக்கண் அப்புணர்ச்சியலையலான்
வந்த சிறுதுயிலை; 2கண்ணைப் பூவென்னும் நினைவினனாய்ப்
பிணியவிழவெனப் பூத்தொழிலாற் கூறினானென்க.

     22. நாள்பல எவன்கழியுமோவென நாளென்பது வருவிக்க.

     பின்னின்ற பன்னாள் (22) என்பதனைப் பாசறை மரீஇ (23)
என்பதனோடு கூட்டுக. மரீஇ யென்பதனை மருவவெனத் திரித்து
மருவுகையாலென்க.

     24. பாடரிது இயைந்த சிறுதுயிலென்றது 3இராப்பொழுதெல்லாம்
பகைவரை வெல்கைக்கு உளத்திற்சென்ற சூழ்ச்சி முடிவிலே அரிதாகப்படுதல்
இயைந்த சிறுதுயிலென்றவாறு,

     சிறு துயிலையுடைய (24) கண் (26) எனக் கூட்டுக.

     25. இயலாது (24) இசையெடுப்பும் (25) எனக் கூட்டுக.

     இமிழிசையென்றது இமிழிசையையுடைய 4இயமரங்களை

     கோடு - சங்கு. முழங்கென்றது அவ்வியமரங்களுக்கு இடையிடையே
முழங்குகின்றவென்றவாறு.

     26. பீடுகெழு செல்வமென்றது படைச்செல்வம்; வீடு - வலி.

     மரீஇய கண்ணென்றது அப்படைமுகத்திலே நாள்தோறும் அமர்ந்தும்
துயிலெழுந்தும் உலவிப் பழகின கண்ணென்றவாறு.

     நீ கூடலனையை (7); பெரும (22), தார்ப்புனலை (11) ஒன்னார் (15)
உருப்பற நிரப்பினையாகயைாலே (16), யான் நின்னை ஒன்று கேட்கின்றேன்;
பீடுகெழு செல்வம் மரீஇய கண் (26) முயக்கத்துப் (20) பொழுது


     1அவதி - எல்லை.

     2இது சமாதியென்னும் குணவணியின் பாற்படும்; "கொழுநகைக்
குறும்போது குறிப்பிற் பிரியாப், புணர்ச்சி மகளிர் போகத்துக் கழுமித்,
துயிற்கண் டிறந்த தோற்றம் போல, நறவுவாய் திறந்து நாண்மதுக் கமழ"
(
பெருங். 2. 15 : 21 - 4)

     3"நெடிதுநினைந்து, பகைவர் சுட்டிய படைகொ ணோன்விரல்.......
இன்றுயில் வதியுநற் காணாள்" (
முல்லைப் .76 - 80)

     4இயமரம் - வாத்தியம்; சங்கும் வாத்தியங்களும் சேர்த்துக் கூறப்படும்;
"சிலம்பின வியமரந் தெழித்த சங்கமே" (
சீவக. 779)