கொண்மரபின் மென்பிணி
அவிழ (21) நாள்பல நினக்கு எவன் கழியுமோ (22)
எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
1அவன் காமவேட்கையி்ற் போர்வேட்கை
மிகுத்துக் கூறியவாறாயிற்று.
தார்ப்புனலை
(11) ஒன்னார் (15) உருப்பற நிரப்பினை (16) என எடுத்துச்
செலவினை மேலிட்டுக் கூறினமையால், துறை வஞ்சித்துறைப் பாடாண்
ஆயிற்று. 8. 'கொல்களிறு' என்பது கூன்.
(கு
- ரை) 1-7. குட்டுவனுக்கு முக்கூடல் உவமை.
1-6. காவிரியின்
வெள்ளச் சிறப்பு.
1. பெரிய மலையின்
கண்ணே இடியோசையால் விலங்கின் கூட்டங்கள்
நடுங்கும்படி.
2. காற்றோடு
மயங்கிய விரைந்த துளிகளை ஆலங்கட்டியோடு சிதறி.
3. கரும்பு தழைத்து
நெருங்கிய வயல்களையுடைய நாடு வளத்தை மிகக்
கொடுக்கும்படி.
4. வளம் பொருந்திய
சிறப்பினையுடைய உலகத்தைப் பாதுகாத்து
சிதறிப் (2) புரைஇயென இயைக்க.
5-6. "காவிரிப்பாவை,
செங்குணக் கொழுகி" (மணி. பதி. 12-3)
5.7. நேர்கிழக்கே
ஒழுகுகின்ற கலங்கலாகிய நிறைந்த
வெள்ளத்தையுடைய காவிரியொன்று அல்லாமலும், பூக்கள் விரிந்த
நீரையுடைய மூன்று ஆறுகளும் ஒருங்கு கூடிய முக்கடலைப் போன்றாய்.
8-11. சேனையைப்
புலனாக உருவகம் செய்கின்றார்.
8. கொல்லுகின்ற
களிறாகிய உலாவுதலையுடைய அலைகள் தம்மில்
மாறுபட்டுப் புடைபெயர, அவற்றிற்கு ஏற்ப அழகிய விற்கள் அலைகளின்
பிசிர்போல விளங்க.
9. உயர்ந்த
கேடகத்தின் எல்லையின்மேல் வேலாகிய மீன்விளங்க.
கேடகமும் வேலும் சேர்த்துக் கூறப்படும் (பட்டினப்.78;
குறிப்புரை);
கேடகத்திற்கு ஆமையை உவமையாகக் கொள்க; "கமடமாம் பரிசை வாங்கி;"
(குற்றாலப். திருநதிச். 21). வேலுக்கு மீன்:
"உறழ்வேலன்ன வொண்கயன்
முகக்கும்", "வயற்கெண்டையின் வேல்பிறழினும்" (புறநா.
249 : 8, 287 : 4.)
10. ஒன்றோடு
ஒன்று கலத்தலையுடைய முரசின் ஒலியாகிய ஓசையைக்
கேட்டு அஞ்சிய, பின் நினக்கு நட்பான அரசர்க்கு. முரசொலி புனலின்
ஒலிக்கு உவமை.
11. பாதுகாவலாகிய
அஞ்சத்தக்க தூசிப்படையாகிய புனலை;
புனற்றாரென்பதனைத் தார்ப்புனலென்று மாற்றிக்கொள்க.
12-4. மலைகளின்
மேலுள்ளனவும் கடலின் கண்ணுள்ளனவும் ஆகிய
அரண்களை அமைத்த, போரின் கண்ணே வஞ்சியாது எதிர்நின்று போர்
செய்து கோபித்த வீரர் மிக்க இடங்களையுடைய நாடுகளை
நின்னுடையனவாகக் கொண்டு; ஆள் - வீரர்; "ஆளமர் வெள்ளம்"
(பு. வெ. 32)
1"மூதில்வாய்த்
தங்கிய முல்லைசால் கற்புடைய, மாதர்பாற் பெற்ற
வலியளவோ - கூதிரின், வெங்கண் விறல்வேந்தன் பாசறையன் வேனிலான்,
ஐங்கணை தோற்ற வழிவு" (தொல். புறத்.
21, ந. மேற்.);
பு. வெ. 169-70.
|