15-6.
அப்பகையரசரது நல்ல புகழ் அகன்ற இடத்தையுடைய
உலகத்தினின்றும் கெட்டு ஓட, பகைவரது சினமாகிய தீ அழியும்படி
நிரப்பினை யாதலால், சேனையைப் புலனாக உருவகித்ததற்கேற்ப, பகைவரது
சினத்தைத் தீயாகக் கூறினார். புனற்றாரை (11) நிரப்பினை (16) என முடிக்க.
16-9. சேரனது
இன்பச் சிறப்புக் கூறப்படும்.
பூசிய சந்தனம்
புலரவும், வண்ணம் துடைக்கப்படவும், பல வகையான
அழகு பொருந்திய கோடுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் மார்பாற்
பிணிக்கப்பட்ட மகளிரது, விரிந்த மெல்லிய கூந்தலாகிய மெல்லிய
படுக்கையிலே தங்கி. கூந்தல் மெல்லணை: குறுந்.
254 : 5, ஒப்பு.
20-22. வருத்துகின்ற
காமமாகிய நோயை நீக்கும் பொருட்டு, அவரது
மார்பை விரும்பிச் சேர்ந்த புணர்ச்சியால் இராப்பொழுதைப் பயன்கொண்ட
முறைமையினால் உண்டான மெல்லிய சிறுதுயில் நீங்குவதற்குப் பெரும, நாள்
எவ்வளவு பல செல்லுமோ? பாசறையில் இன்னும் எவ்வளவு காலம் இருக்க
நேருமோ என்றபடி. திருகிய - திருக.
22-6. பகைவரது
கொடுமையினால் பலநாள் பாசறையிலே தங்கிப்
பழகுதலால் தூங்குதல் அரிதாகப் பொருந்தும் சிறுதுயிலும் இயலாமல்
சங்கொலியும், பிறவாத்தியங்களின் ஓசையும் எழுப்புகின்ற பெருமை
பொருந்திய படையாகிய செல்வத்திற் பழகிய கண்கள்.
மரீஇய கண் (26)
எவன்பல கழியுமோ (22) என இயைக்க. (10)
இதன் பதிகத்துக்
கடவுட்பத்தினி (4) என்றது கண்ணகியை.
9. இடும்பில்
என்றது இடும்பாதவனத்தை. புறம்-அவ்விடம்.
15. வாலிழை
கழித்த பெண்டிரென்றது அப்பழையன் பெண்டிரை.
16. கூந்தன்முரற்சி
என்றது அவர் கூந்தலை அரிந்து திரித்த கயிற்றினை.
17. குஞ்சரவொழுகை
பூட்டியது அப்பழையன் வேம்பினை ஏற்றிக்
கொண்டுபோதற்கு.
18. குடிக்குரியோரென்து
அரசிற்குரியாரை.
(பதிகம்)
|
வடவ ருட்கும்
வான்றோய் வெல்கொடிக்
குடவர் கோமா னெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன்
கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் |
5 |
கானவில்
கானங் கணையிற் போகி
ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை
இன்ப லருவிக் கங்கை மண்ணி
இனந்தெரி பல்லான் கன்றொடு கொண்டு
மாறா வல்வி விடும்பிற் புறத்திறுத் |
10 |
துறுபுலி யன்ன
வயவர் வீழச் |
|