51. |
துளங்குநீர்
வியலகங் கலங்கக் கால்பொர
விளங்கிரும் புணரி யுருமென முழங்கும்
கடல்சேர் கானற் குடபுல முன்னிக்
கூவற் றுழந்த தடந்தா ணாரை |
5 |
குவியிணர்
ஞாழன் மாச்சினைச் சேக்கும்
வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின்
அடும்பம லடைகரை யலவ னாடிய
வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றும்
தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந் |
10 |
தியலின ளொல்கின
ளாடு மடமகள்
வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப்
பெருமலை வயின்வயின் விலங்கு மருமணி
அரவழங்கும் பெருந்தெய்வத்து
வளைஞரலும் பனிப்பௌவத்துக் |
15 |
குணகுட கடலோ
டாயிடை மணந்த
பந்த ரந்தரம் வேய்ந்து
வண்பிணி யவிழ்ந்த கண்போ னெய்தல்
நனையுறு நறவி னாடுடன் கமழச்
சுடர் நுதன் மடநோக்கின் |
20 |
வாணகை யிலங்கெயிற்
றமிழ்துபொதி துவர்வா யசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை யுறைதலின்
வெள்வே லண்ணன் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோநின் னுணரா தோரே |
25 |
மழைதவழும்
பெருங்குன்றத்துச்
செயிருடைய வரவெறிந்து
கடுஞ்சினத்த மிடறபுக்கும்
பெருஞ்சினப்புய லேறனையை |