15

அவனுடைய அருமைக் குணங்களைப் புலப்படுத்திப் பாடினர்; அவ்வருமைச்
செய்யுட்கள் புறநானூற்றில் காணப்படும். அவனிறந்த பின்பு, அவனது
பிரிவாற்றாது மனமுருகிப் பல செய்யுட்களாற் புலம்பி, அவன் புதல்வியரை
அழைத்துச் சென்று மணஞ் செய்துகொள்ளும்படி இருங்கோவேள்,
விச்சிக்கோனென்பவர்களை வேண்டி மறுத்தமை கண்டு அவர்களை
வெறுத்துப் பின்பு அம்மகளிரைப் பார்ப்பார்ப்படுத்துத் தம்முடைய
நட்புக்கடனை கழித்தனர்.

     ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் குறிஞ்சிப் பாட்டை
இயற்றினர்; பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்றாகிய இன்னா நாற்பதும் இவர்
இயற்றிய நூலே.

     இவருடைய செய்யுட்கள் மிக்க இனிமையை யுடையன. பழைய
உரைகளில் உதாரணமாகக் காட்டப்படும் "கபிலரது பாட்டு" என்னும்
தொடர்மொழியே இதனை வலியுறுத்தும்.

     இவரருளிச் செய்தனவாக 277-பாடல்கள் இப்பொழுது கிடைக்கின்றன.
அவற்றுள், அகற்பாக்கள் 207 [நற். 20; குறுந். 29; ஐங்குறு. 100; பதிற். 10;
அகநா.
16; புறநா. 30; குறிஞ்சிப். 3 "நெட்டிலையிருப்பை" என்பது -1]
கலித்தொகையிலுள்ள கலிப்பாக்கள் 29; இன்னாநாறபதிலுள்ள பாடல்கள் 41.

     இவரியற்றிய பாடல்கள் இவர் குறிஞ்சித்திணையில் மிகப்
பயின்றவரென்றும் அதன் வளங்களை விளங்கப் பாடுதலில் மிக்க
ஆற்றலுடையவரென்றும் தெரிவிக்கின்றன. இவருடைய வாக்கில் முருகக்
கடவுள், சிவபெருமான், பலதேவர், திருமால் இவர்களுடைய துதிகள்
வந்திருக்கின்றன. இதனால் இவர் சமயக்கோட்பாட்டிற் பாரதம் பாடிய
பெருந்தேவனாரைப்
போன்றவராக எண்ணப்படுகிறார். எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் முத்தொகுதி நூல்களிலும்
இவருடைய பாடல்களும் நூல்களும் கலந்திருத்தல் இவரது பெருமையை
விளக்கும்.

     "அரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய, மறம்புரி கொள்கை
வயங்குசெந் நாவின், உவலை கூராக் கவலையி னெஞ்சின், நனவிற் பாடிய
நல்லிசைக், கபிலன்" (பதிற்றுப்பத்து, 85) எனப் பெருங் குன்றூர் கிழாரும்,
"வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்" (புறநானூறு, 35) எனப்
பொருந்திலிளங்கீரனாரும், ‘’புலனழுக்கற்ற வந்த ணாளன், இரந்துசென்
மாக்கட் கினியிடனின்றிப், பரந்திசை நிற்கப் பாடினன்" (126), "பொய்யா
நாவிற் கபிலன்"(174) என மாறோகத்து நப்பசலையாரும் பாடியவற்றைப்
பார்க்கையில்