பக்கம் எண் :

152

     19-21. விறலியரது வருணனை.

     ஒளி பொருந்திய நெற்றியையும், மடப்பம் பொருந்திய பார்வையையும்
மிக்க ஒளியையுடைய விளங்குகின்ற பற்களையும், அமிழ்துபோன்ற நீரை
அடக்கிய சிவந்த வாயையும், தளர்ந்த நடையையுமுடைய விறலியரது.

     வாள்நகை: ஒருபொருட்பன்மொழி.

     22. பாடல் மிகுதலின் அங்கே தாமதித்தனையாய்த் தங்குதலால்.

     23-4. வெள்ளிய வேலையுடைய சேரன் ஐம்புலன்களிடத்தும்
நெகிழ்ச்சியுடையான் போலுமென்று நின் இயல்பை முற்ற உணராதோர்
நினைப்பார்களோ?

     25-8. சேரனுக்கு இடி உவமை.

     மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலையில், குற்றமுடைய பாம்புகளை
உருட்டி அவற்றின் மிக்க கோபத்தையுடைய வன்மையைக் கெடுக்கும் மிக்க
சினத்தையுடைய மேகத்தில் தோன்றும் சிறந்த இடியை ஒப்பாய்.

     பகையரசர்க்குப் பாம்பும் சேரனுக்கு இடியும் உவமை; வரையுதிர்க்கு,
நரையுருமி னேறனையை" (மதுரைக். 62 - 3): "இளையதாயினுங் கிளையரா
வெறியும், அருநரை யுருமிற் பொருநரைப் பொறா அச் செருமாண் பஞ்சவ
ரேறே" (புறநா. 58 : 6 : 8)

     29-30. சேரனுடைய படைவீரரது சிறப்பு.

     தம்மைத் தடுத்து நிற்பவரது வளைந்த துதிக்கையையுடைய யானையினது
பூணை அணிந்த கொம்பை வெட்டும் வாளையுடைய வெற்றியையுடையர்
நின்படையில் வாழும் வீரர்.

     31-7. போர்க்களத்தில் சேரனுடைய நிலை.

     31-2. வீரம்பொருந்திய பனையின் வெள்ளிய ஓலையை அணிந்து,
இரத்தத்தால் தன் நிறம் நீங்கிய போர்க்கண்ணியிடத்தே உறுதலைப் பருந்து
ஆராயவும். இரத்தம் படிந்த பனந்தோட்டைப் பருந்து ஊனென்று மயங்கி
அதனைக் கொத்தக் கருதியது. புனைந்து நோக்கலை (36) என இயையும்.

     33-4. மாமிசத்தையுடைய அம்பு கிழித்த கரிய கண்ணையுடைய
தண்ணுமை வாசித்தலிற் கைவல்ல இளையர்தம் கையால் வருந்துதல் கெடவும்.
தூக்கணை: "புலவுக்கணை" (பு. வெ. 10)

     35-7. நெடுந்தகாய், பரிகாரம் இல்லாத கோபத்தையுடைய கரிய பெரிய
கூற்றுவன் தன்வலையை விரித்தாற்போன்ற பார்வையையுடையையாய்ப்
போர்க்களத்தில் பகைவர்க்கு அச்சத்தைச் செய்தலையுடையாய்; " நீயே
மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக், கூற்று வெகுண்டன்ன முன்பொடு,
மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே" (புறநா. 42 : 22 - 4)

     விறலியர் பாடலை நுகரும்பொழுது உருகுதலும் வன்மையும்
உடையனாகி மெல்லியன் போலத் தோற்றினாலும் பகைவரை அடுதலில்
மிகவலியானென்றபடி.

     (பி - ம்) 12. விலங்கு மட்டுமணி. 13. அரவு வழங்கும் 33. தூகணை
கிழித்த. 35. மாவருங்கூற்றம் 37. கடியைநெடுந்தகை செருவகத்தானே. (1)

 

52. கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி