பக்கம் எண் :

154

விளக்கு. 16. நளிதல் - தன்னைச் 1சேவிக்கும் மகளிரொடு குரவையாடிச்
செறிதல்.

     17. ஊரலந்தித்தி - ஊரலையுடைய தித்தி; அம்முச் சாரியை. 18. ஈரிதழ்
- குளிர்ந்த இமை. 19. அவிழகமென்றது அவிழ்ந்த பூவினை.

     22. தான் அவனை எறிதற்கு ஓக்கிய சிறியதொரு செங்குவளையெனச்
சிறுமையால் அவள்மென்மை கூறிய சிறப்பான் இதற்கு, 'சிறுசெங்குவளை'
என்று பெயராயிற்று.

     இரப்ப (23) என்னும் செயவெனெச்சத்தினைக் கையதை (24) என்னும்
முற்றுவினைக் குறிப்பொடு முடிக்க.

     சிறுசெங்குவளை (22) பெயர்வோள் கையதை (24) என முற்றாக
அறுத்து, அது (25) எனப் பின் சுட்டிற்றாக்குக.

     28. பகலிடம் - பகற்பொழுது.

     30. உருபு கிளர் வண்ணம் - நிறம் விளங்கின தன்மை.

     வண்ணங்கொண்ட (30) வேந்தர் (31) எனக்கூட்டி 2ஞாயிறு போலக்
கோபித்து எதிர்நின்ற வேந்தரென உரைக்க.

     நல்லமர்க்கடந்த நின்தடக்கை (10) இரப்போர்க்குக் கவிதலல்லதை
இரைஇய (11) மலர்பறியாவெனக் கேட்டிகும் (12); இனி துணங்கைக்குத்(14)
தலைக்கை தந்து நீ (15) அளிந்தனைவருதல் உடன்றனளாகி (16) நின்னரிவை
(18) நின் (21) எறியர் ஓக்கிய சிறுசெங்குவளையானது (22) நீ (25) 3ஈயென்று
இழிந்தோன் கூற்றான் இரப்பவும் நினக்கு ஈந்துபோகாது நின் இரப்பிற்கு
ஒல்லாளாய் நீ எமக்கு (23) யாரென்று பெயர்வோள் கையதாயிருந்தது (24);
அவ்வாறு இரந்து நீ பெறாது அவளை உருத்த நோக்கமொடு அதை
அவள்பானின்றும் (25) பகுத்துக்கொள்ளமாட்டா யாயினை (26); அவ்வாறு
அது பகுக்கமாட்டாத நீ வேந்தர்களெயிலைப் (31) பகுத்துக்கோடல் (26)
யாங்கு வல்லையாயினாய்? நின் கண்ணி வாழ்க (27) என மாறி வினைமுடிவு
செய்க.

     பாஅல் (26) யாங்கு வல்லுநையோ (27) என்றதன்முன் எயில் (31)
என்பது கூட்டவேண்டுதலின் மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவன் கைவண்மையொடும் வென்றியோடு படுத்து
அவன் காமவின்பச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     இப்பாட்டு, துணங்கையாடுதல் காரணமாகப் பிறந்த ஊடற்
பொருட்டாகையாற் குரவைநிலை யென்றாவாறாயிற்று.

     (கு - ரை) 1-2. சேரனுடைய பகைவரது படைச்சிறப்ப.

     1. கொடிகள் அசைகின்ற நிலையையுடைய ஆண்யானைகள் நெருங்கப்
பெற்று. யானையின் மீது கொடி விளங்குதல்: நெடுநல். 87; பதிற் 69 :
1 - 2. 88 :

     17. 2. திருந்திய தொழிலையுடைய மணிகளைக்கட்டிய உயர்ந்த
தேர்களை வேறிடங்களிற் பரவச்செய்து.

     3-4. பிறநாடுகளிலுள்ள அரிய ஆபரணங்களைத் தரும் பொருட்டுக்
கடல்நீரில் உயர்ந்துசெல்லும் பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல் திசைகளிலே
திரிந்தாற்போல, திரிந்தாங்கு (4) களிறு மிடைந்து (1) என இயைக்க; "விழுமிய
நாவாய் பெருநீ ரோச்சுநர், நனந்தலைத் தேஎத்து நன்கல னுய்ம்மார்,
புணர்ந்துடன் கொணர்ந்த புரவி" (மதுரைக். 321-3). யானைக்குக்


     1முருகு. 212, உரை.

     2பொருந. 135 - 6.

     3தொல். எச்ச.49.