பக்கம் எண் :

155

கப்பல்: மதுரைக். 379 - 83; நற். 74 : 3 - 4; புறநா. 26 : 1 - 3.

     5. மேகத்தை ஒத்து எழுகின்ற கரிய பெரிய பரிசைப்படையினையும்;
பரிசைக்கு மேகம் உவமை: பதிற். 62 : 2; "மழையென மருளும் பஃறோல்"
(புறநா. 17 : 34). அணிந்து: உவமஉருபு. மை அணிந்து - மை பூசப்பெற்று
எனலுமாம்.

     6-7. உடலை மூடுகின்ற கவசத்தையும் வேண்டுமென்று எண்ணாமல்
வேலையும் தாங்கிப் போர்க்களத்தின் முன்னே புறப்பட்டுச் செல்லும்
அஞ்சாமையையுடைய வீரர்; இவர் காலாட்படையிலுள்ள வேல்வீரர்.

     8-9. தோல்வியடையாமைக்கு காரணமான தும்பையானது பகைவரிடத்தே
விளங்கும்படி, உயர்ந்த நிலையையுடைய வீரசுவர்க்கத்தை அடைந்தனராய்ப்
பலர் இறக்கும்படி; பலர் இறந்து வீரசுவர்க்கத்தையடைய என்பது கருத்தாகக்
கொள்க. பகைவரிடத்தே பொருங்கால் அதிரப் பொருது சிறத்தலின் அவர்
அணிந்த தும்பை விளங்குவதாயிற்று.

     10-12. சேரனது கொடைச் சிறப்பு.

     நல்ல போர்களை வஞ்சியாது எதிர்நின்று வென்ற நினது இடியை
ஒத்துப் பகைவரை அழிக்கின்ற பெரிய கைகள், நின்பால் வந்து
இரப்பவர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றைக் கொடுத்தற்பொருட்டுக் கவிதல்
அல்லாமல், பிறரிடம் சென்று இரத்தற்கு விரிதலை அறியா எனக் கேட்டோம்;
இப்பொழுதோ எனின்; பதிற். 44 : 5-6. செல்லுறழ் தடக்கை; முருகு 5, ந,

     13-6. சேரன் தன்னைச் சேவிக்குமகளிரோடு குரவையயர்தல்.

     13. ஒளிவிடும் காலையுடைய, செல்வமெல்லாம் விளங்கித் தோன்றும்
விளக்கின் ஒளியிலே.

     14-6. முழவு ஒலிக்கின்ற, மகளிர் ஆடுகின்ற துணங்கைக் கூத்திற்குத்
தழுவுதலையுடைய தெப்பமாக, முழங்குதலில் வல்ல ஏற்றைப்போல
முதற்கையைக் கொடுத்து நீ அவர்களோடு செறிந்துவருதலை அறிந்து சினம்
கொண்டவளாகி; "நிரைதொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ளக்,
கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால்" (கலித். 73 : 16 - 7);
"மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர், எல்வளை மகளிர் தலைக்கை
தரூஉந்து" (புறநா. 24 : 8 - 9)

     17-8. வருந்துகின்ற மாலையைப்போன்ற தன்மையையும்,
பரவுதலையுடைய தேமலையும், குளிர்ந்த இமைகளையுடைய மழைபோன்ற
கண்களையும் உடைய பெரிய இயல்பையுடைய நின் தேவி.

     19-22. சேரன் பெருந்தேவியின் ஊடல் கூறப்படும்.

     19-20. ஒள்ளிய இதழையுடைய பூவைப்போன்ற சிறிய அடியின் கண்
அணிந்த, பலவாகிய இரண்டு கிண்கிணிகள் சிறிய பரட்டை வருத்த;
"பைம்பொற் கிண்கிணி பரட்டுமிசை யார்க்கும், செந்தளிர்ச் சீறடி" (பெருங்.
2. 3 : 85 - 6). உறுப்பு வகையினாற் பலவாகவும், எண்ணால் இரண்டாகவும்
அமைதலின், 'பல்சில கிண்கிணி' என்றார்.

     21. கரையை இடிக்கின்ற நீரிலேயுள்ள தளிரைப்போல
நடுங்குகின்றவளாய் நின்று. கோபத்தாலும் கரணத்தாலும் நடுங்கிற்றென
ஊடலும் கூடலுமுணர்த்திற்று. (சீவக. 134, ந.)

     21-2. நின்மீது எறிதற் பொருடடுத் தூக்கிய சிறிய செங்குவளை மலர்.