23-4.
இரப்போன் கூற்றால் அதனை எனக்கு ஈயென்று நீ கேட்பவும்
தான் அதற்கு மனம் பொருந்தாளாய், "நீ எமக்கு என்ன
முறையையுடையையோ? " என்று சினத்தால் கூறி நீங்குவோளாகிய நின்
தேவியின் கையிலுள்ளது; எமக்கு என்றது தன் பெருமிதந் தோன்றக் கூறியது
(சிலப். 20 : 12. அரும்பத.);
"தொடிய வெமக்குநீயாரை" (கலித். 88 :
3).
கையதை; ஐகாரம்: அசைநிலை. சிறுசெங்குவளை கையது என்க; கையது:
குறிப்பு முற்று.
25-6.
கோபித்த பார்வையொடு அக் குவளைமலரை நீ நின்பால்
விரையப் பகுத்துக் கொள்ளுதலை மாட்டாயாயினாய்.
26-7.
பகுத்துக்கொள்ளுதலை எவ்வாறு வல்லையாயினாய்; நின் கண்ணி
வாழ்வதாக. கண்ணியை வாழ்த்தல்: பதிற்.
56 : 3; "வார் கழல் வேந்தே
வாழ்கநின் கண்ணி" (மணி. 5 : 28)
28-9.
மற்ற நான்கு பூதங்களும் விரிதற்குக் காரணமான பெரிய
ஆகாயத்தில் பகற்பொழுதைச் செய்யும்பொருட்டுச் சுடுகின்ற கிரணங்கள்
விளங்குகின்ற அச்சம் பொருந்திய சூரியனது.
30. நிறம்
விளங்கின தன்மையைக் கொண்ட: உருபு - உருவமுமாம்.
31. வான்றோய்
வெண்குடை வேந்தர்தம் எயில் - வானைத் தோயும்
உயர்ந்த வெண்குடையையுடைய பகைவேந்தருடைய மதில்களை.
வண்ணங்கொண்ட
(30) வேந்தர் (31) என்க.
எயிலைப்
(31) பாஅல் (26) யாங்குவல்லுநையோ (27) என இயைக்க.
இச்செய்யுளில்
ஒன்றற்கு ஒன்று முரண்பாடாகத் தோற்றம் இருவகைச்
செய்திகள் சொல்லப்பட்டன. சேரன் பிறர்பால் இரக்கும் இயல்பினன்
அல்லனாயினும் ஊடிய தேவியின்பால் சிறு செங்குவளையை இரப்பவனானான்;
பகைவருடைய பெரிய மதில்களைக் கைக்கொள்ளும் வன்மையை
யுடையவனாயினும் தன் தேவியினிடமிருந்து சிறு செங்குவளையையும்
கொள்ளும் வன்மையிலனானான்.
29-31.
சினங்கொண்ட அரசர்க்குச் சூரியன் உவமை: "ஊழியிற் சினவும்,
பருதி மண்டில மெனப்பொலி முகத்தினன்" (கம்ப.
வருணனை வழி. 15).
(பி - ம்) 6. என்னாது. 17. உயலுங். 18. பேரிலரிவை. 20. பல்செல்,
பல்செங்.
22. எறியரோச்சிய. 27. வல்லினையோ (2)
53. |
வென்றுகலந்
தரீஇயர் வேண்டுபுலத் திறுத்தவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
நல்கினை யாகுமதி யெம்மென் றருளிக்
கல்பிறங்கு வைப்பிற் கடறரை யாத்தநின் |
5 |
தொல்புகழ்
மூதூர்ச் செல்குவை யாயிற்
செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பி னம்புடை வாயிற்
கோள்வன் முதலைய குண்டுகண் ணகழி
வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை |
10 |
ஒன்னாத்
தெவ்வீர் முனைகெட விலங்கி |
|