பக்கம் எண் :

157

நின்னிற் றந்த மன்னெயி லல்லது
முன்னும் பின்னுநின் முன்னோ ரோம்பிய
எயின்முகப் படுத்தல் யாவது வளையினும்
பிறிதாறு சென்மதி சினங்கெழு குருசில்
 15 எழூஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகைக்
குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணிற்
றேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
 20 மேம்படு வெல்கொடி நுடங்கத்
தாங்க லாகா வாங்குநின் களிறே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - குண்டுகண்ணகழி (8)

     (ப - ரை) 1. அவரென்றது அவ்வாறு இறுக்கும்படி நின்னொடு
எதிர்ந்த அரசரென்றவாறு. 2. நாடு திறைகொடுப்பவென்றது நாட்டைத்
திறைகொடுப்பவென்றவாறு. திறைதரவென்றதற்குத் திறை கொடுப்பவென்றது
1இடவழுவமைதி. நல்கினையாகுமதி எம் என்று (2) திறை கொடுப்ப (3) எனக்
கூட்டுக.

     4. வைப்பு - இடம். கடற்றையென இரண்டாவது விரிக்க.

     சிலம்பும் தழையும் (6) புரிசைக்கண் தங்கின (9) என்றது 2ஈண்டும்
பொருவீருளீரேல் நும் காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய
உடையினையும் ஒழித்து இச்சிலம்பினையும் தழையினையும் அணிமினென
அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவாறென்க.

     இனி, அவற்றை அம்மதிலில் வாழும் 3வெற்றிமடந்தைக்கு
அணியென்பாரும் உளர்.

     8. கோள்வன் முதலையவென்று முன்வந்த அடைச்சிறப்பான் இதற்கு,
'குண்டுகண் ணகழி'
என்று பெயராயிற்று.9. வளைந்து செய்புரிசை
யென்பதனை வளையச்செய் புரிசையெனத் திரித்துக் காலவழுவமைதியாகக்
கொள்க.

     வளைந்துசெய்புரிசை (9) ஆகிய நின்னிற்றந்த மன்னெயில் 11) என
இருபெயரொட்டு.

     11. நின்னிற்றந்த மன்னெயிலென்றது நின்னாற் கொண்டு பிறர்க்குக்
கொடுக்கப்பட்ட மன்னெயிலென்றவாறு. கொடுத்த வென்பதற்குத் தந்தவென்பது
இடவழுமைதி.


     1தொல். கிளவி. 29 - 30.

     2'வரிப்புனை பந்தொடு பாவை தூங்க" (முருகு, 68) என்பதும்
'பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத் தூக்கின
வென்றவாறு' என்னும் அதன் உரையும் இங்கே அறிதற்பாலன.

     3வெற்றிமடந்தை - துர்க்கை.