பக்கம் எண் :

158

கொடுத்தவெனவே கொண்டுகொடுத்தவெனக் கோடலென்பது போந்த பொருளாய் விளங்கிற்று. தரப்பட்டவென்பதனைத் தந்தவெனச்
1செயப்படுபொருளைச் செய்ததுபோலச் சொல்லிற்றாக்குக. மன்னெயிலல்லதென்புழி மன்னெயிற் கண்ணென ஏழாவது விரித்து
அதனைப் பின்வருகின்ற எயின்முகப் படுத்தல் (13) என்பதிடமாகப்
படுத்தலென்பதோர் சொல்வருவித்து அதனொடு முடிக்க.

     12. முன்னும் பின்னுமென்றது முன்னோர் தாங்கள் இறப்பதற்கு முன்னும்
இறந்ததற்குப் பின்னுமென்றவாறு.

     பின்னோம்புதலாவது முன்னோர் தமக்குப்பின்னும் இவ்வரசாள்வாரும்
நம்மைப்போல இவ்வாறு ஓம்புகவென நியமித்துவைத்தல்.

     13. யாவதென்றது அஃது என்ன காரியம்? நினக்குத்
தகுவதொன்றன்றென்றவாறு.

     16. குழூஉநிலைப்புதவென்றது பல நிலமாகச் செய்த
கோபுரவாயிலென்றவாறு. 17. தேமென்றது தேனீ. கடாம் - மதில்கண்டுழிப்
போர் வேட்கையாற் பிறக்கும் மதம்.

     நீ வேண்டுபுலத்து இறுத்து அவர் (1) திறைகொடுப்ப (2) அருளி (3)
நின் (4) மூதூர்ச்செல்குவையின் (5) குருசில் (14) வளையினும் (13) பிறிதாறு
செல் (14); செல்லுதற்கு யாது காரணமெனின் புதவிற் கதவு மெய்காணின் (16),
ஆங்கு நின்களிறு தாங்கலாகா (21); தாங்க வேண்டுவதேல், நின்னிற்றந்த
எயின் முகத்துப் படுத்துவதல்லது (11) நின் முன்னோரோம்பிய (12) எயின்
முகத்துப்படுத்தல் யாவது (13) என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.

     'செல்குவையாயின்' (5) என்பதன்பின் 'பிறிதாறு சென்மதி' (14)
என்பதனையும், 'தாங்க லாகா வாங்குநின் களிறு' (21) என்பதன் பின்
'எயின்முகப்படுத்தல்யாவது' (13) என்பதனையும் கூட்டவேண்டுதலின்
மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது, அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து அவன்
வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. பிறநாடுகளை வென்று அந்நாட்டரசர் திறையாகக்
கொடுக்கும் ஆபரணங்களைக் கொணரும்பொருட்டுத் தான் வேண்டிய
இடத்திலே படையொடு சென்று தங்கி; " நாடுகெட வெருக்கி நன்கலந்
தரூஉம்","யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து" (பதிற். 83 : 7, 15 : 1)
பகைவர் கலங்களைத் திறையாகத் தருதல்: பதிற். 90 : 6 - 8; "நன்கலங்
களிற்றோடு நண்ணா ரேந்தி, வந்துதிறை கொடுத்து" (அகநா: 124 : 1 - 2)

     1-3. அப்பகையரசர், 'எம்மைக் காப்பாயாக' என்று கூறிக் குறையாத
புதுவருவாயையுடைய தம் நாட்டைத் திறையாகக் கொடுப்ப அவர்களுக்கு
அருள்செய்து; "ஒல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி வெல்புக
ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்" (கலித். 26 : 11 - 2). நல்கினையாகுமதி
யென்று திறைகொடுப்பவெனக் கூட்டுக.

     4-5. சேரன் தன் நகர்க்கு மீண்டு செல்லுதல். கற்கள் விளங்கிய
இடங்களையுடைய காடுகளைத்தன் அரையிலே


            1தொல. வினை. 49.