பக்கம் எண் :

159

கட்டினாற்போன்று விளங்குகின்ற நினது பழையதாகிய புகழையுடைய பழைய
நகருக்கு மீண்டு செல்வாயானால். கடறு - காடு; காடென்றது மதிலைச் சூழ்ந்த
காவற்காட்டை. மலைநாடாதலின் கல்பிறங்குவைப்பிற் கடறென்றார்.

     6-9. மதிலின் சிறப்பு.

     6-7. சிவந்த மூட்டுவாயையுடைய சிலம்பொடு அணியாகிய தழை
தங்குகின்ற எந்திரக்கட்டினையும், அம்பையுடைய வாயிலையும்;
பொறிமூட்டுவாய்: "பொறி, புனைவினைப் பொலங்கோதை" (பரி. 11 : 64 - 5)
"எய்பெயரும் பகழி வாயிற் றூக்கி" (தொல். புறத். 12, ந. மேற்.)

     8. நீந்திச் செல்ல முயல்வாரைக் கொள்ளுதல் வல்ல முதலையையும்
குழிந்த இடத்தையும் கொண்ட அகழியையும் உடைய; "கராஅங் கலித்த
குண்டுகண் ணகழி" (புறநா. 37 : 7)

     9. ஆகாயத்தைப் பொருந்தும்படி உயர்ந்த, அவ்வகழியை வளையும்படி
செய்த மதில், புரிசை ஆகிய மன்னெயில் (11) என இயைக்க.

     10-11. நின்னோடு பொருந்தாத பகைவரது போர் கெடும்படி தடுத்து,
நின்னாற் கைக்கொண்டு கொடுக்கப்பட்ட நிலைபெற்ற மதில்களிடத்துச்
செலுத்துவதே அல்லாமல்.

     12-3. தாம் இறப்பதற்கு முன்னும் இறந்தபின்னும் நின்குலத்து முன்னோர்
அளித்த மதில்களிடத்தே செலுத்துவது நினக்கு என்ன காரியம்? அது
நின்பெருமைக்குப் பொருந்துவது அன்று.

     13-4. சினம்பொருந்திய குருசிலே! வளைந்து செல்ல வேண்டிய
தாயினும், வேறு வழியே செல்லுவாயாக. 15 - 6. மதிற்கதவின் சிறப்பு.

     கணையமரத்தாற் பாதுகாக்கப்பட்டு, இரும்பினாற் பிணித்தலையுடைய
பலகையாற் செய்யப்பட்ட, பலநிலைகளையுடைய கோபுரவாயிலிலேயுள்ள
கதவை மெய்யாகக் கண்டால். 17 - 8. சேரனது யானையின் சினம்.

     17. உண்ணும் பொருட்டுத் தேனீக்கள் பரவிய மதத்தால் குத்துக்
கோலைக் கடந்த; மதம் போர் வேட்கையால் பிறந்தது.

     18. நிறத்தால் வேங்கைமலரைவென்ற புள்ளிகள் விளங்கித்
தோன்றுகின்ற நெற்றியினிடத்தே; புகர்நுதல்: வாளா பெயர் மாத்திரையாய்
நின்றது.

     19. ஏந்திய கையைச் சுருட்டி அங்குசத்தைக் கடந்து; "மதமாக்
கொடுந்தோட்டி கைந்நீவி" (பரி. 10 : 49)

     20. மேம்பட்ட என்றமையால் எடுத்த கொடி தன்மீது அசைய.

     21. நின்களிறுகள் அவ்விடத்தே அடங்குதல் ஆகா.

     கதவு மெய்காணின் தாங்கலாகாவென்றதன் கருத்து அக்கதவைத்தன்
கொம்பாற் குத்தச் செல்லுமென்றபடி; "நீண்மதி லரணம் பாய்த்தெனக்
தொடிபிளந்து, வைந்துதி மழுகிய தடங்கோட்டியானை" (ஐங்குறு. 444)

     நின்முன்னோராற் பாதுகாக்கப்பட்ட வேந்தரது மதில்வழியே செல்லற்க;
வேறுவழியே செல்க என்பது கருத்து.

     (பி - ம்) 4. கடறரையார்த்த. 6. செம்பொற் சிலம்பு. 17. காழக நீவி. (3)


54. வள்ளியை யென்றலிற் காண்குவந் திசினே
உள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி
வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோள்