இவருடைய மனம் வாக்குக்
காயங்களின் தூய்மையும், அறம்புரி கொள்கையும், பெரும் புலமையும், அன்புடைமையும், நட்பின்
பெருமையும் நன்கு
விளங்குகின்றன.
இவராற் பாடப்பட்டோர்:-
அகுதை, இருங்கோவேள், ஓரி,
சேரமான், செல்வக்கடுங்கோவாழியாதன், நள்ளி, மலையமான் திருமுடிக்காரி,
விச்சிக்கோன், வேள்பாரி, வையாவிக்கோப்பெரும்பேகனென்பவர்கள்.
கொல்லிமலை, பறம்புநாடு, பறம்புமலை, முள்ளூர்க்கானம், முள்ளூர்
மலையென்பவைகள் இவராற் பாராட்டப் பெற்றிருத்தலின், அவைகள் இவர்
காலத்தில் விளக்கமுற்றிருந்தனவென்றும் இவர் பழகிய இடங்களென்றும்
தெரிகின்றன. நட்பு, வண்மை, நன்றி மறவாமை, யென்பவைகளை
செய்யுட்களிற் பரக்கக் காணலாகும்.
'கபிலபரணர்'
என்பதனால் பரணரென்பவருக்கும் பழைய
திரு
விளையயாடற் புராணத்தில் வந்துள்ள, "பின்னமில் கபிலன் றோழன்
பெயரிடைக் காடனென்போன்" என்னும் திருவிருத்தத்தால்,
இடைக்காடருக்கும் சிறந்த நட்பினராக இவர்
எண்ணப்படுகிறார். இவர்
வேறு; தொகை நூல்களிற் காணப்படும் தொல்கபிலரென்பவர்
வேறு.
8-அரிசில்கிழார்
:- இவர் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறை
யென்னும் அரசன்மீது இந்நூல் எட்டாம் பத்தைப்பாடி ஒன்பது நூறாயிரம்
பொற்காசு பரிசில் பெற்றதன்றி அவன் கொடுத்த அரசாட்சிக்குரிய
சிங்காதனத்தை அவனுக்கே மீட்டும் இரந்து கொடுத்து அவன்பால்
அமைச்சுரிமை பூண்டு விளங்கினார்; 'கிழார்' என்பது வேளாளர்க்கேயுரிய
சிறப்புப் பெயராக இருந்ததென்று தெரிதலின், இவரை வேளாண்மரபினரென்று
கொள்ள வேண்டும்; இதனை, தொல். மரபியல், 74-ஆம் சூத்திரத்தின்
விசேடவுரையிற் காட்டிய பெயர்களாலும் திருத்தொண்டர்
புராணவரலாற்றின் 2- ஆம் செய்யுளில் எடுத்துக்காட்டிய பெயர்களாலும்
உணரலாம். அரிசில் என்பது ஈண்டு ஒரு நதியின் பெயரோ ஒரூரின் பெயரோ
யாதும் விளங்கவில்லை. சோழ நாட்டிலுள்ள நதிகளுள் அரிசிலென்று ஒரு
நதியும் மைஸூரைச் சார்ந்த ஊர்களுள் அரிசிற்கரையென்று ஒரூரும்
உள்ளன. கிழார் - உரியவர்.
வையாவிக்கோப்
பெரும்பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை
அவனுடன் சேர்த்தல் வேண்டி அவனைப் பாடினர்; அதிகமான் தகடூரெறிந்து
வீழ்ந்த எழினி யென்பவனுடைய பிரிவாற்றாது வருந்திப் புலம்பினர்; தகடூர்
யாத்திரை யென்னும் நூலில் அவ்வச்சமயங்களில் இவர் செய்தனவாகச் சில
பாடல்களுண்டென்று தெரிகிறது. (தொல். புற.
8, 12, ந.)
மேற்கூறிய
சேரவரசனும் உக்கிரப் பெருவழுதியாரும் பேகனென்னும்
வள்ளலும் அதிகமானும் இவர் காலத்துத் தலைவர்கள்.
|