பக்கம் எண் :

161

     14. தோமரம் - தண்டாயுதம். வலத்தரென்றது வினையெச்ச வினைக்
குறிப்புமுற்று.

     நாமஞ்செய்ம்மார் (14) இளையரொடெழுதரும் (15) ஒல்லார் (16) எனக்
கூட்டுக.

     15. ஏவல் வியங்கொண்டென்றது இளையரை முன்பு போர்க்குக் கையும்
அணியும் வகுப்புழி ஏவித் தாமும் ஏவல்களைச் செய்துகொண்டென்றவாறு.

     ஏவலையுடைய வியமென இரண்டாவது விரிக்க. வியம் - ஏவல்.

     யானை காணின் (16) நில்லாத்தானை (17) என்றது 1காலாள்
முதலாயினவற்றைத் தரமல்லவென்று கழித்துநின்று யானை காணின் நில்லாது
செல்லும் தானையென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'நில்லாத் தானை' என்று பெயராயிற்று.

     17. இறைகிழவோயென்றது இறைவனாதற் றன்மையையுடையா
யென்றவாறு.

     இறைகிழவோய், நின்னை (17) வள்ளியனென்று யாவரும் கூறுதலானே
நின்னைக் காண்பேன் வந்தேன் (1); யான் உள்ளியதனை நீ
முடிப்பாயாகவேண்டும்; நின்கண்ணி வாழ்வதாக (2); விறலியர் நின் மறம் பாட
(6) இரவலர் புன்கண் தீரும்படி (7) நன்கலங்களை வரைவில வீசி (8)
அத்தன்மையையாகையாலே, என்போலும் இரவலரது ஆக்கத்தின் பொருட்டுச்
சிறிதுகாலமும் (9) இவ்வுலகத்திலே நின்று உயர்நிலை யுலகத்திற் செல்லாதே
(10) இவ்விருநிலமருங்கிலே நெடுங்காலம் நிலை பெறுவாயாக (11) எனக்
கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் கொடைச்சிறப்பும் தன்குறையும் கூறி
வாழத்தியவாறாயிற்று.

     (கு - ரை) 1. மக்களெல்லாரும் நின்னை வண்மையையுடையாயென்று
கூறுதலால் நின்னைக் காணவந்தேன்.

     2. யான் நினைத்ததை அங்ஙனமே முடிப்பாய்; நின் கண்ணி வாழ்க.

     3-6. விறலியரது வருணனை. 3. வீங்கிய சந்துகளையுடைய, திரண்ட
மூங்கிலைப் போன்ற பெருத்த தோளையும் (கலித். 45:13-5)

     4. ஏந்திய எழுச்சியையுடைய குளிர்ந்த கண்களையும், எழுதப்பட்டாற்
போன்று எழுதலையுடைய இளைய நகிலையும்.

     5. பூத்தொழிலையுடைய துகிலையணிந்த அல்குலையும், தேனீக்கள்
பரவிய கூந்தலையும்; "சுரும்புண வொலிவரு மிரும்பல் கூந்தல்" (அகநா.
161 : 10). தேம் - தேனீ (பதிற். 53 : 17, ) உரை.

     6. மின்னுகின்ற இழையையும் உடைய விறலியர் நினது வீரத்தைப் பாட
(பதிற். 46 : 1 - 6) ; "புறம்பெற்ற வயவேந்தன், மறம் பாடிய பாடினி யும்மே"
(புறநா. 11 : 10 - 11)

     7-9. சேரனது கொடைச் சிறப்பு.


     1நின்படைவழி வாழ்நரும் காலாண்மேற் செல்லாது தாங்குநர்
யானைக்கோடு துமிக்கும் எஃகுடைவலத்தராயிருப்பர்' (
பதிற். 51 : 29, உரை)