|
7-8. இரவலர் துன்பம் நீங்கும்படி நாள்தோறும் புகழ்ச்சியமைந்த நல்ல
ஆபரணங்களைத் தனக்கென்று வரைதல் இல்லாதனவாகக் கொடுத்து.
9. அத்தன்மையையுடையாயாதலால்
சிறிது காலமும்.
10-11.
சேரனை வாழ்த்துதல்.
உயர்ந்த
நிலையையுடைய தேவருலகத்துச் செல்லாமல் இவ்வுலகத்தே
நிலைபெற்றுப் பெரிய பூமியிலே நீண்ட காலம் வாழ்வாயாக.
12. நிலத்தின்
அகலம் குறைபட இடப்பட்ட எல்லையையுடைய
பாசறையையுடைய பகைவர் நாட்டினிடத்தே சென்று. நிலத்தின் பரப்பினும்
பாசறைகள் மிதியாயின வென்றபடி.
13. ஒலிக்கின்ற
கண்ணையுடைய வீரமுரசு போர்க்களத்தின் நடுவே
ஒலிக்கும்படி; "படுகண் முரசங் காலை யியம்ப, வெடிபடக் கடந்து" (மதுரைக்.
232 -3)
14. தண்டாயுதத்தை
வலப்பக்கத்தில் ஏந்தியவராய்ப் பகைவர்க்கு
அச்சத்தைச் செய்யும் பொருட்டு.
15-6.
இளையரை ஏவுதலையுடைய வியத்தைக்கொண்டு அவ்விளைய
ரொடு எழுகின்ற பகைவரது யானைப் படையைக் கண்டால்.
17. நில்லாமல்
அதன்மேற் செல்கின்ற தானையையுடைய இறையாதற்
றன்மையையுடையாய்.
இறைகிழவோய்
(17) வள்ளியை என்றலிற்காண்கு வந்திசின் (1); நின்
கண்ணி வாழ்க; உள்ளியது முடித்தி (2); நெடிது மன்னியர் (11) என முடிக்க.
(பி
- ம்.) 3. வீங்கறை. 8. வரைவிலை. (4)
| 55. |
ஆன்றோள்
கணவ சான்றோர் புரவல
நின்னயந்து வந்தனெ னடுபோர்க் கொற்றவ
இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து நன
்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க் |
| 5 |
கமழுந் தாழைக்
கானலம் பெருந்துறைத்
தண்கடற் படப்பை நன்னாட்டுப் பொருந
செவ்வூன் றோன்றா வெண்டுவை முதிரை
வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை
குடவர் கோவே கொடித்தே ரண்ணல் |
| 10 |
வாரா ராயினு
மிரவலர் வேண்டித்
தேரிற் றந்தவர்க் கார்பத னல்கும்
நகைசால் வாய்மொழி யிசைசா றோன்றல்
வேண்டுவ வளவையுள் யாண்டுபல கழியப்
பெய்துபுறந் தந்து பொங்க லாடி |
| 15 |
விண்டுச்
சேர்ந்த வெண்மழை போலச்
சென்றா லியரோ பெரும வல்கலும் |
|