|
நனந்தலை
வேந்தர் தாரழிந் தலற
நீடுவரை யடுக்கத்த நாடுகைக் கொண்டு
பொருதுசினந் தணித்த செருப்புக லாண்மைத் |
20 |
தாங்குநர்த்
தகைத்த வொள்வாள்
ஓங்க லுள்ளத்துக் குருசினின் னாளே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - துஞ்சும் பந்தர் (4)
(ப - ரை)
பௌவத்து (3) நன்கல வெறுக்கை (4) என்றது
பௌவத்திலே வந்த நன்கலமாகிய செல்வமென்றவாறு.
4. பந்தர்
- பண்டகசாலைகள்.
நன்கல
வெறுக்கை துஞ்சுமென்ற சிறப்பானே இதற்கு, 'துஞ்சும் பந்தர்'
என்று பெயராயிற்று.
7. செவ்வூன்றோன்றா
வெண்டுவையென்றது அரைத்துக் கரைத்த
மையால் தன்னிற் புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவையென்றவாறு.
முதிரையென்றது
அவரை துவரை முதலாயினவற்றை.
8. வாலூனென்றது
வெண்ணிண ஊனென்றவாறு.
வல்சி
மழவரென்றது தம் செல்வச்செருக்கானே சோறுண்பது பெரிதன்றி
முன்பு எண்ணப்பட்டவற்றையே உணவாகவுடைய வீரரென்றவாறு. 10.
இரவலரையென்னும் இரண்டாவது விகாரத்தால் தொக்கது; இரவலரை
வேண்டியென்றது தன்னாட்டு இரவலரின்மையின் அவரைப் பெற
விரும்பியென்றவாறு.
11. தேரிற்றந்தென்றது
அவ்விரவலருக்கு அவர் உள்வழித் தேரைப்
போகவிட்டு அதிலே அவர்களை வரப்பண்ணியென்றவாறு. தேரானென உருபு
விரிக்க; தேரெனக் தேர்ச்சியாக்கி. அவ்விரவலரை 1அவருள்ள விடத்தில்
தேடி
அழைத்தென்றுமாம்.
14. பொங்கலாடியென்றது
2எஃகின பஞ்சுபோல வெளுத்துப் பொங்கி
யெழுதலைச் செய்தென்றவாறு. வெண்மழைபோலச் (15) சென்றாலியர் (16)
என்றது அம்மழை பெய்து புறந்தருங் கூற்றையொத்து அது பெய்து
வெண்மழையாகக் கழியுங் கூற்றை ஒவ்வாது ஒழிகவென்றவாறு.
18. நீடுவரையடுக்கமென
விரிக்க; அடுக்கம்- ஈண்டு அடுக்குதல்.
அல்கலும் (16) நாடு கைக்கொண்டு (18) வேந்தர் தாரழிந்து அலறப் (17)
பொருது சினந்தணிந்த செருப்புகலாண்மை (19) என மாறிக் கூட்டுக.
1"துறைதுறை
தோறு மிறைகொண் டோருள், அணியா தோரையாராய்ந்
துழிதரும். பணியா வேந்தன் பணிநரைக் காண்மின்" (பெருங்.
1. 40: 242 - 4)
2"எழிலி,
எஃகுறு பஞ்சிற்றாகி.............நெடுவரையாடும்" (நற்.
247 : 3 - 5);
"பொங்கல் வெண்மழை, எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன, துவலை" (அகநா.
217 : 1 - 3)
|