மலையைச் சேர்ந்த
வெளுத்த மேகத்தைபோல நீ செல்லா தொழிவாயாக.
16-9. நாள்தோறும்
அகன்ற இடத்திலுள்ள பகையரசர், தம் தூசிப்படை
அழிந்து அலறும்படி போர்செய்து, உயர்ந்த மலைகளின் அடுக்குகளையுடைய
நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டு, அதனால் சினம் குறைந்த போரை
விரும்புகின்ற வீரத்தையும்.
20. தன்னைத்
தடுப்பாரை அது செய்யவொட்டாமல் தடுத்த
வாளினையும்.
21. ஓங்குதலையுடைய
ஊக்கத்தையும் உடைய தலைவ, நினது நாள்.
உள்ளம் - ஊக்கம். நின் நாள் (21) சென்றாலியர் (16) என இயைக்க.
(பி
- ம்) 15. மழைபோலச். 18. நெடுவரை. 19. பொருது முரண்
செருக்கிய. (5)
56. |
விழவுவீற்
றிருந்த வியலு ளாங்கட்
கோடியர் முழவின் முன்ன ராடல்
வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி
வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த் |
5 |
திலங்கும்
பூணன் பொலங்கொடி யுழிஞையன்
மடம்பெரு மையி னுடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே. |
துறை
- 1ஒள்வாளமலை. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் -
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி (7)
(ப - ரை)
5. பூணன் உழிஞையனென்பன வினைக்குறிப்புமுற்று.
7. வேந்து மெய்ம்மறந்த
வாழ்ச்சி யென்றது மாற்று வேந்தர் அஞ்சித்
தங்கள் மெய்யை மறந்த வாழ்வென்றவாறு.
வாழ்ச்சி, மெய்மறத்தல்
காரணமாக அதன் காரியமாய் வந்ததாகலான்,
மெய்ம்மறந்தவென்னும் பெயரெச்சம் 2நிலமுதற்பெயர் ஆறுமன்றிக்
காரியப்பெயரென வேறோர் பெயர் கொண்டதெனப்படும். வாழ்வு - வெற்றிச்
செல்வம்.
இச்சிறப்பானே
இதற்கு, 'வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி'
என்று
பெயராயிற்று.
வாழ்ச்சிக்
(7) களம் (8) எனக் கூட்டுக. முரசம் துவைப்ப வாள் உயர்த்து
(4) இலங்கும் பூணனாய்ப் பொலங்கொடி உழிஞையனாய்ப் (5) போர்க்களத்து
ஆடும் கோ (8) வியலுளாங்கட் (1) கோடியர் முழவின் முன்னர் ஆடல் (2)
வல்லானல்லன்; அவன் கண்ணி வாழ்க (3) என மாறிக் கூட்டி வினை முடிவு
செய்க.
'வல்லானல்லன்'
என்பதன்முன் கோவென்பது கூட்டவேண்டுதலின்
மாறாயிற்று.
இதனாற் சொல்லியது
அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
1பு.
வெ. 147.
2தொல்,
வினை. 37.
|