பக்கம் எண் :

166

     (கு - ரை) 1-3. விழா பெருமையோடு விளங்கிய அகன்ற தன்
ஊரினிடத்தே, கூத்தரது முழவின் முன்னர் ஆடுதலை வல்லவன் அல்லன்;
அவன் கண்ணி வாழ்வதாக.

     4. வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசம் ஒலிப்ப, வாளை உயர வீசி.
வலம்படு முரசம்: பதிற். 17 : 5, உரை.

     5. விளங்குகின்ற ஆபரணங்களை அணிந்து, பொன்னாற் செய்த
கொடியாகிய உழிஞையினது பூவைச் சூடி.

     6-8. அறியாமை மிகுதலால் பகைகொண்டு படையெடுத்துவந்த
பகைவேந்தர் தம் உடம்பை மறத்தற்குக் காரணமான வெற்றிச்செல்வம்
அழிந்துகெட்ட போர்க்களத்தில் ஆடு அரசன்; "கழித்துவா ளமலை யாடிக்
காட்டுவார்" (சீவக. 783)

     ஆடுகோ (8) ஆடல் (2) வல்லானல்லன்; அவன் கண்ணி வாழ்க (3)
என முடிவு செய்க.

     கண்ணியை வாழ்த்தல்: பதிற். 54 : 2, உரை

     மு. "தேரின்கண் வந்த அரசர்பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக்
களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கை பிணைந்து
ஆடும் குரவை' (தொல், புறத், 21. ந.) (6)


57. ஓடாப் பூட்கை மறவர் மிடறப
இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்
குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே
துணங்கை யாடிய வலம்படு கோமான்
 5 மெல்லிய வகுந்திற் சீறடி யொதுங்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
பாணர் கையது பணிதொடை நரம்பின்
விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக்
குரல்புண ரின்னிசைத் தழிஞ்சி பாடி
 10 இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த
வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை
ஆன்ற வறிவிற் றோன்றிய நல்லிசை
ஒண்ணுதன் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்க ணஞ்சும்
 15 புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே.

     துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர்
- சில்வளை விறலி (6)

     (ப - ரை.) மறவர் மிடறபக் (1) களத்தோன் (3) எனக் கூட்டுக.

     3. பனிற்றுதல் - தூவுதல்; பனிற்றுவது புண்பட்ட வீரருடலெனக்
கொள்க. களமென்றது ஈண்டுக் களத்தையணிந்த பாசறையினை.